பொது செய்தி

இந்தியா

வங்கிகளை முறைப்படுத்த வேண்டும் : சக்தி காந்ததாஸ்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (29)
Advertisement

மும்பை : ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித அறிவிப்புக்கு ஏற்ப, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' உள்ளிட்ட பல வங்கிகள், தாமாக முன்வந்து, தங்களது கடன் மற்றும் டெபாசிட்டுக்கான வட்டியை மாற்றி அமைத்துள்ளன.


'இந்நிலையில், அனை த்து வங்கிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்; இதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும்,'' என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மே மாதத்திலிருந்து டெப்பாசிட்டுகளுக்கான வட்டியையும், ஜூலை மாதத்திலிருந்து வீட்டுக்கடனுக்கான வட்டியையும், ரிசர்வ் வங்கி அறிவித்த, ரெப்போ வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாற்றி அறிவித்தது. எஸ்.பி.ஐ., வங்கியை தொடர்ந்து, கடந்த வாரம், பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட ஆறு முக்கியமான வங்கிகள், வட்டியை மாற்றி அறிவித்துள்ளன.

அவகாசம் - வங்கிகள் மோசமான நிதி நிலையில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வட்டியை குறைக்குமாறு அழுத்தம் கொடுக்காத நிலையிலும், இந்த வங்கிகள் வட்டியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டில் மட்டும், 1.10 சதவீதம் அளவுக்கு, ரெப்போ வட்டியை குறைத்து அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முக்கியமான, ஆறு பொதுத் துறை வங்கிகளும், வட்டியை குறைத்துள்ளன.

இதனால், வாராக் கடன் பிரச்னையில் சிக்கியிருக்கும் வங்கிகள், அவற்றிலிருந்து மீள்வதற்கு, அவகாசம் வேண்டும் என்ற வாதமும் இனி தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில், 'பிக்கி' அமைப்பு நடத்திய, வங்கிகள் ஆண்டு மாநாட்டில் பேசிய, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப, வங்கிகள், விரைவாக தங்களது வட்டிவிகிதங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். வங்கிகளிடமிருந்து நாங்கள் விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்.

ரெப்போ வட்டிக்கு ஏற்ப, வங்கிகளும் வட்டியை மாற்றிக் கொள்ளவதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.நாங்கள் இது குறித்து கண்காணித்து வருகிறோம். தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்படும். வங்கிகளுடன் பணியாற்றுவதில், ரிசர்வ் வங்கி ஒரு கட்டுப்பாட்டு அமைப்பாக இருந்து, என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம்.சந்தையில் சாதகமான மாற்றங்கள் தெரிகிறது. அதற்கு ஏற்ப வங்கிகளும் நடந்துகொள்கின்றன. தற்போது, அவை ரெப்போ வட்டிக்கு ஏற்ப புதிய கடன்களுக்கு தங்களது வட்டியை நிர்ணயிக்க துவங்கி உள்ளன.

ஸ்திரத்தன்மை இருப்பினும், இது, இன்னும் வேகமாக நடைபெற வேண்டும். இன்றைய பொருளாதார நிலை, நிதிக் கொள்கையை மட்டும் எதிர்பார்க்கவில்லை, அதன் அறிவிப்புகள், வேகமான பரிமாற்றம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது.எனவே, வங்கிகள், வட்டி விஷயத்தில் விரைந்து நடவடிக்கைகளை எடுக்கும் என, எதிர்பார்க்கிறோம். எதிர்மறையான எண்ணங்கள் யாருக்கும் உதவப்போவதில்லை. நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம்.

அனைவருடைய முன்னுரிமையும், வளர்ச்சிக்கானதாகவே இருக்க வேண்டும். பணப்புழக்க பிரச்னை மட்டுமே வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்காது. உலகளவிலான வங்கி அமைப்பு, இப்போது இடர்பாடுகளை அதிகம் தாங்கும் வண்ணம் உள்ளது. நீண்டகால வளர்ச்சிக்கு, நிதி ஸ்திரத்தன்மை மட்டுமே தீர்வாக இருக்கும்.பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்ததைவிட குறைவாக, மந்த நிலைக்கான அடையாளங்களுடன் இருக்கிறது.

இவை உலகின், நிதி ஸ்திரத்தன்மைக்கு சவாலாக இருக்கும்.வங்கிகள் அரசாங்கத்தை எதிர்பார்த்திருப்பதை விட, சந்தையிலிருந்து மூலதனத்தை திரட்ட வேண்டும். இதுதான் அவர்களுக்கான உண்மையான சோதனை.திவால் சட்டத்தில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பது, வங்கி துறையை பாதுகாக்கும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
20-ஆக-201914:07:48 IST Report Abuse
Rengaraj வெளியில் இருந்து பார்ப்பதற்கு பேங்க் ஊழியர்கள் ஜாலியாக ஏ.சி.யில் வேலை பார்க்கிறார்கள் என்று எல்லோருக்கும் தோன்றும். ஆனால் இன்று வங்கியில் ஊழியர்கள் மிகுந்த நெருக்கடியில் வேலை பார்க்க வேண்டியுள்ளது . முக்கியமாக கடன் வசூல். கடன் அட்டை பெற்று வாங்கிய கடனை குறித்த நேரத்தில் அடைக்காததில்இருந்து நகை கடன், வாகன கடன், தனி நபர் கடன், சிறு தொழில் கடன் என்று வட்டியை வசூல் பண்ணவே ஊழியர்கள் நேரம் விரையம் ஆகிறது. நாணயமும் நேர்மையும் குறைந்து வரும் இந்த கலியுகத்தில் டெபாசிட் வாங்கணும். கடனும் கொடுக்கணும். கொடுத்த கடனை நியாயமான முறையில் வசூல் பண்ணவும் செய்யணும். குறைந்த ஆட்களை கொண்டு நிறைந்த சேவை செய்யணும். மக்கள் நம்பிக்கையையும் பெற்றாக வேண்டும். பணப்பட்டுவாடாவில் நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும். நம் மக்கள் அரசு அலுவலங்களில் கும்பிடுபோட்டு வளைந்து நெளிந்து கேட்பவற்றை கொடுத்து காரியம் சாதிப்பார்கள். வழக்கு என்றால் வருடக்கணக்கில் நீதிமன்றம் செல்ல தயாராக இருப்பார்கள். எம்.எல்.ஏ , எம்.பி இவர்களிடம் சிபாரிசுக்காக மணிக்கணக்கில், நாள்கணக்கில் காத்திருப்பார்கள். ஆனால் வங்கி என்று வந்துவிட்டால் வங்கி ஊழியர்கள் இவர்களுக்கு வீடு வரை வந்து சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வங்கிகளின் வட்டிவிகிதம் சந்தை நிலவரத்துக்கு ஏற்றாற்போல்தான் இருக்கும். கந்துவட்டிக்காரர்கள் வசூல்செய்வது போல் அல்ல. இதை சராசரி மக்கள் எல்லோரும் புரிந்துகொள்வதில்லை. கடந்த பத்து ஆண்டு வட்டி நிலவரம் ஸ்டேட் பாங்கில் எவ்வளவு என்று அந்த வங்கியின் வெப்சைட் சென்று பார்த்தால் தெரியும். வங்கிகளில் ஒரு காலத்தில் ஐந்து அல்லது ஆறு மணிக்கு வேலை ஆட்கள் இருக்க மாட்டார்கள் . இன்று அப்படியில்லை. உறுதி செய்ய ஏதாவது பக்கத்தில் இருக்கும் வங்கிகளுக்கு சென்று பார்த்தால் தெரியும். அல்லது தங்கள் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீடு எதிர்வீட்டு ஆட்கள் யாரவது வங்கியில் வேலைபார்த்தால் விசாரித்து தெரிந்து கொள்ளலாம். முன்பு வங்கிகளில் கிளைகள் குறைவு ஆனால் அதிக ஆட்கள் இருந்தனர். இன்று அப்படியில்லை. தொழில்நுட்பம் என்று ஆகிவிட்டபிறகு ஆட்கள் குறைக்கப்பட்டுவிட்டது. கிளைகளும் அதிகம் ஆகிவிட்டது. ஆனாலும் வங்கிகளில் கூட்டம் குறைவதில்லை. காரணம் பணம், கடன் இவற்றின் தேவை. ஒன்று மட்டும் நிச்சயம். வங்கிகள் வளர்ச்சி இருந்தால் மட்டுமே பொருளாதாரம் வளரும். இன்றும் ஒரு சில வணிகர்களை கேட்டால் தெரியும். அவர்கள் வியாபார வளர்ச்சி வங்கியை சார்ந்தே இருந்தது என்று கூறுவார்கள். அது தனியார் வங்கியானாலும் அரசுடமை வங்கியானாலும் சரி. மக்கள் சேவையில் தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தி வளர்ச்சி அடைந்த துறை வங்கிகள் மட்டுமே. இன்றும் வங்கிக்கு செல்லாமலே நீங்கள் எந்தவொரு பணப்பரிவர்த்தனை செய்ய இயலும். உங்களிடம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் இருந்தால் போதும். அவ்வாறு அணைத்து அரசு சேவைகளுக்கும் நாம் செய்ய இயலுமா? வேறு எந்த அரசு துறையும் இந்த அளவுக்கு தொழில்நுட்பத்தை மக்கள் சேவைக்காக பயன்படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் இந்தியா நன்கு முன்னேறி இருக்கும். நகை கடன் தரும் முன்னர் தங்கத்தை உரசுவது தரத்தை சோதிக்கவே. அதையே போல் கடன் தரும் முன்னர் கேட்கப்படும் தகவல்கள் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளவே. வங்கிகள் ஏமாற்றப்படும் போது வரும் போலீஸ் நடவடிக்கைளை அணைத்து சராசரி மக்களும் அறிவதில்லை. நடைமுறை சிக்கல்கள் எதுவும் தெரியாமல் வங்கிகளையும் வங்கி ஊழியர்களையும் குற்றம் சொல்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
20-ஆக-201915:00:54 IST Report Abuse
Girijaஐயோ பாவம் இப்படி ராணுவ வீரர் போல் பணிபுரிய வேண்டியிருக்கிறது, தனியார் துறையினர் தான் அடுக்குமாடி சொகுசு கட்டிடத்தில் காரில் வேலைக்கு சென்று நோகாமல் நோன்பு கும்பிடுகின்றனர். இப்போது வங்கிகளுடன் மக்களுக்கு நேரடி தொடர்பு கடன் வசதிகளுக்கு மட்டுமே, மீதி எல்லாவற்றிரிற்கும் ஈ சர்வீஸ் வந்தாகிவிட்டது. கோல்டு பாண்டு பிரபலம் ஆகிவிட்டால் உங்கள் தயவின்றி விரைவாக மார்ட்கேஜ் செய்து அவசரகடன் பெற்றுக்கொள்ளலாம் ஆன்லைனில். வங்கிகள் வெளியே வந்து நாடு நடப்பை பார்க்கவேண்டும், சீட்பண்ட் கள் செயல்படுவதை பார்த்து வணிகத்தை மாற்றி அமைக்கவேண்டும்....
Rate this:
Share this comment
Mahe - chennai,இந்தியா
20-ஆக-201916:57:08 IST Report Abuse
MaheBank holds my money in the account and giving me 4% and they offer loans @ 12%. they getting 8% return on Whose Money? with no money invested they getting 8% return Check banks revenue from the non maintenance of Minimum balance alone....
Rate this:
Share this comment
Rengaraj - Madurai,இந்தியா
20-ஆக-201917:35:20 IST Report Abuse
RengarajFor current account there is no interst . For savings account they are offering 3.5. The Current and Savings portion of deposits consists only 20 to 25% of their total deposits. For remaining portion they offer various interest rate depends on maturity . Likewise, for all loans they are not charging 12% . Please visit the websites of various banks and confirm about the various loan shemes and the rate of interest they charge. Bank does not force you to maintain more balance. If you wish you can take away at any time. Even for fixed deposits you can encash it at any time. Even you can maintain zero balance under Basic Savings Bank account scheme or No frill account scheme without cheque book. Foreign banks also offer deposits with varying interest rates. The minimum balance is also varying for rural, semi urban, urban and metro. Private finance companies, chit funds, Limited Companies are moblising deposits and getting funds from public. Now-a-days businessmen are more clever. Even for 1% interest rate difference, they switch over from one bank to other bank. The choice is yours....
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
20-ஆக-201910:49:48 IST Report Abuse
Girija கரெக்ட் தனியார் வங்கியின் முதலாளிகள் யார் என்று வெளியிடவேண்டும். ஐ சி ஐ சி வங்கி, ஆக்ஸிஸ் HDFC வங்கி போன்றவைகள். இவர்கள் ஓடி போனால் அல்லது திவால் ஆனால் பொதுமக்களின் முதலீடுகள் அப்படியே கிடைக்குமா என்பதை உறுதி செய்ய வேண்டும். யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா சில ஆண்டுகளுக்கு முன்னால் சில்ட்ரன்ஸ் எடுகேஷனல் எண்டோவ்மென்ட் மியூச்சுவல் பண்ட் என்று ஆரம்பித்து பெற்றோர்களுக்கு பட்டை நாமம் சாத்தியது, மத்திய அரசின் நிறுவனமே இப்படி செய்தால் இந்த வங்கிகள் என்னவெல்லாம் செய்யும்?
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-201909:58:39 IST Report Abuse
RM The Economy is going down. PM never care about this as high priority. Film shooting, foreign tours are so important to him. Video conference can also be used for some issues as he used telephone for Mr.Trump conversation.He should give attention to economy and take measures.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X