அரசியல் செய்தி

தமிழ்நாடு

3வது முறை பால்விலை உயர்வு: ஸ்டாலின்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (16)
Advertisement
Milk, D.M.K,M.K.Stalin,Stalin, kashmir, Tn Govt, தி.மு.க, ஸ்டாலின், பால், மாவட்டங்கள், காஷ்மீர்,

திருநெல்வேலி: 2011க்கு பிறகு, அதிமுக ஆட்சி அமைந்த பின் 3வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஒண்டிவீரன் 248வது நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது: 2011 அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3வது முறையாக பால் விலை உயர்ந்துள்ளது, கொள்முதல் செய்பவர்களுக்கும் - மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவே இது போன்று செய்கிறார்கள். மக்களுக்கு பால் வார்ப்பார்கள். ஆனால், பால் விலை உயர்வினால், மக்களின் வயிற்றில் அடித்திருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆவின் அதிக லாபத்தில் செயல்படுவதாக சொல்கிறார். முதல்வரோ நஷ்டத்தில் செல்வதாக கூறுகிறார் அவர்களுக்கு உள்ளேயே முரண்பட்ட கருத்து உள்ளது, அதனை சரி செய்ய வேண்டும்.

மணிமண்டபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3வது முறையாக பால் விலை உயர்ந்துள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவின் அதிக லாபத்தில் செயல்படுவதாக சொல்கிறார். தமிழக முதல்வரோ நஷ்டத்தில் செல்வதாக கூறுகிறார். அவர்களுக்கு உள்ளேயே முரண்பட்ட கருத்து உள்ளது. லஞ்சம் ஊழலை மறைக்கவே அதிமுக அரசு மாவட்டங்களை பிரித்து வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

மாவட்டங்கள் பிரிக்கப்படுவது ஆட்சியாளர்கள் செய்த ஊழல், கொள்ளை ஆகியவற்றை மூடி மறைக்க திட்டமிட்டு செல்படுத்தப்படுகிறது. நல்ல எண்ணத்துடன் செய்வதாக கருதவில்லை எனக்கூறினார்.

பின்னர், நிருபர்களுக்கு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், எந்த மாநிலத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் திமுக துணை நிற்கும், அதை போல் தான் காஷ்மீர் விவகாரத்தில் திமுக போராட்டம் அறிவித்துள்ளது என்றார்.

துண்டு சீட்டு வைத்து பேசுவதாக பாஜ கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஸ்டாலின் புள்ளி விபரங்களுடன் ஆதாரத்துடன் பேசுவதற்காகத் தான் பயன்படுத்துகிறேன், தமிழிசை, எச்.ராஜா போன்று பொத்தாம் பொதுவாக பேச மாட்டேன். நாங்குநேரி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
21-ஆக-201902:41:47 IST Report Abuse
Allah Daniel "துண்டு சீட்டு வைத்து பேசுவதாக கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஸ்டாலின் புள்ளி விபரங்களுடன் ஆதாரத்துடன் பேசுவதற்காகத் தான் பயன்படுத்துகிறேன்".. அட..அடடா..அடடட்டா...சுதந்திர தினம் என்னைக்கு..குடியரசு தினம் என்னைக்குனு சரியா சொல்ல தெரியாது..இது பண்ற ரவுச பாரு..
Rate this:
Share this comment
Cancel
பால் பிரியன் 🇮🇳தமிம்நாடு. பரவாயில்லை.விவசாயிகளுக்கு நல்லது நடந்தால் நன்றே.டாஸ்மார்க் விலையை விட இது மிகவும் குறைவு.சுடலையே உங்கள் ஆட்சியில் விலை ஏறாத மாதிரி பொய் பேட்டி உனக்கு தேவையா.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
20-ஆக-201916:03:04 IST Report Abuse
narayanan iyer இவர்களின் ஆட்சியிலும்தானே பால் விலை உயர்ந்தது..என்றாலும் இப்போ பால் விலை உயர்த்தியது சரியில்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X