கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்தவ கல்வி நிறுவனம் பற்றிய கருத்து ஐகோர்ட் வாபஸ்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (66+ 157)
Advertisement
கிறிஸ்தவ கல்வி நிறுவனம், ஐகோர்ட், வாபஸ்,

சென்னை: 'இரு பாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக, பெற்றோர் மத்தியில் உணர்வு உள்ளது' என்ற கருத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் திரும்ப பெற்று கொண்டார்.

சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லுாரியில் படித்த 34 மாணவிகள், உதவி பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் மீது பாலியல் தொந்தரவு குறித்த புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.இதனை எதிர்த்து, உதவிப் பேராசிரியர், சாமுவேல் டென்னிசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, கிறிஸ்தவ மிஷனரிகள், ஏதாவது ஒரு வழியில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாக, இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. இருபாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாற்றதாக இருப்பதாக, பெற்றோர் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது.
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நல்ல கல்வியை வழங்கினாலும், அறநெறியை போதிப்பது என்பது, 'மில்லியன் டாலர்' கேள்வியாக உள்ளது எனக்கூறியிருந்தார். இந்நிலையில், வழக்கிற்கும், கருத்திற்கும் தொடர்பு இல்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

இதனையடுத்த, இரு பாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் உணர்வு உள்ளது என்ற கருத்தும், கட்டாய மத மாற்றத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபடுகின்றன என்ற கருத்தையும் நீக்கி, நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (66+ 157)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஆக-201905:06:59 IST Report Abuse
கதிர் it was a thought from his heart
Rate this:
Share this comment
Cancel
21-ஆக-201903:55:17 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Very sad, for. moment I thought one judge in the entire system had guts to spell the truth. now its gone. shame.
Rate this:
Share this comment
Cancel
Raju Sundaresan - Edison,யூ.எஸ்.ஏ
21-ஆக-201901:15:10 IST Report Abuse
Raju Sundaresan இதையே இந்து மத்ததை பற்றி சொல்லியிருந்தால் இப்படி நீக்கப்பட்டிருக்குமா/?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X