சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் மேல்முறையீடு

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (116+ 60)
Advertisement
Delhi High Court, dismisses, anticipatory bail, Former Union Finance Minister, P Chidambaram,Chidambaram, INX Media case, ப.சிதம்பரம், சிதம்பரம், முன்ஜாமின், தள்ளுபடி, டில்லி ஐகோர்ட், ஐகோர்ட்,

சென்னை: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன் ஜாமின் மனுக்களை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்ததையடுத்து, சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்த போது, 2007ம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. இதில், சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இதே போல, சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான 3,500 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இவ்விரு வழக்குகளிலும், விசாரணையில் இருந்து சிதம்பரம் நழுவுவதாகவும், எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், இரு விசாரணை அமைப்புகளும் தெரிவித்தன.
இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும், ஆனால், தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்து, முன் ஜாமின் கோரி டில்லி ஐகோர்ட்டில், சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.






இரு வழக்குகளிலும், சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து, 2018, ஜூலை 25ல், நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இதற்கான தடை, அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி, 25ல், விசாரணை முடிவடைந்து, தீர்ப்பை ஒத்திவைக்கப்பட்டது.






இந்நிலையில், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன வழக்கில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (116+ 60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
20-ஆக-201923:42:20 IST Report Abuse
Vakkeel VanduMurugan சிவகங்கை காரனுங்க ரொம்ப அறிவாளிங்க. யாருக்கு வோட்டு போட்ட, மறுபடியும் இடை தேர்தல் வரும்ன்னு பிளான் பண்ணிதான் போட்டிருக்காங்க. நல்ல வசூல் தான். enjoy
Rate this:
Share this comment
Cancel
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
20-ஆக-201923:37:23 IST Report Abuse
Vakkeel VanduMurugan வாய்தாவுக்கும், முன் ஜாமீனுக்கும் காட்டும் வேகத்தை, நம் நீதிமன்றம் தண்டனைக்கும் கட்டலாம்.
Rate this:
Share this comment
Cancel
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
20-ஆக-201923:30:36 IST Report Abuse
Vakkeel VanduMurugan அதெப்படி எங்க வழக்கெல்லாம் பல வருஷம் காத்துட்டு இருக்கு, இந்த வழக்கு மட்டும், நாளைக்கே கோர்ட் எடுத்துக்குது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X