சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் | A team of Central Bureau of Investigation (CBI) officers arrives at the residence of P Chidambaram in connection with INX Media case. | Dinamalar

சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (55)
Share
புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து. சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ, மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர்.காங்.மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்த போது, 2007ம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து, 305 கோடி
சிதம்பரம், வீட்டில், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, அதிகாரிகள்

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து. சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ, மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர்.


latest tamil newsகாங்.மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்த போது, 2007ம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம், அனுமதி அளித்தது. இதில், சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீடு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு, மற்றும் சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான 3,500 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு தொடர்பான இரு வழக்குகளையும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இவ்விரு வழக்குகளிலும், விசாரணையில் இருந்து சிதம்பரம் நழுவுவதாகவும், எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், இரு விசாரணை அமைப்புகளும் தெரிவித்தன.இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும், ஆனால், தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்து, முன் ஜாமின் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று நடந்த விசாரணையில் சிதம்பரம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.


சிதம்பர் வீட்டில் அதிகாரிகள் குழு

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இன்று இரவு டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், சிதம்பரத்திற்கு சம்மன் அளிக்கவே அதிகாரிகள் சென்றதாகவும், அப்போது சிதம்பரம் வீட்டில் இல்லை எனவும், சம்மன் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X