மதிய உணவில் வெறும் சாதம், உப்பு: மேற்கு வங்கத்தில் தான் இந்நிலை

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (20)
Advertisement
மதிய உணவு,சாதம், உப்பு, மே.வங்கம்,

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், கோல்கட்டா அருகில் உள்ள, அரசு பள்ளி ஒன்றில், மாணவர்களின் மதிய உணவில், வெறும் சாதமும், உப்பும் மட்டுமே வழங்கப்பட்டது. இதை, பத்திரிகையாளர்களுடன் சென்று காட்டிய, பா.ஜ., - எம்.பி., 'மாநிலம் முழுவதும், மதிய உணவு திட்டத்திற்கான அரிசி மற்றும் பிற பொருட்களை, திரிணமுல் காங்கிரசார் கொள்ளை அடிக்கின்றனர்' என, குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு உள்ளது. தலைநகர் கோல்கட்டாவிலிருந்து, 35 கி.மீ.,யில், ஹூக்ளி லோக்சபா தொகுதியின், பா.ஜ., -எம்.பி.,யாக இருப்பவர், லாக்கெட் சாட்டர்ஜி, 48, என்ற பெண். இவர் அந்த பகுதி பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு, சின்சுரா என்ற இடத்தில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு சென்றார்.அங்குள்ள அறிவிப்பு பலகையில், 'இன்றைய மதிய உணவு - அரிசி சாதம், சோயா பீன்ஸ் கறி, தொட்டுக் கொள்ள பருப்பு' என, எழுதப்பட்டிருந்தது. ஆனால், மாணவியருக்கு பரிமாறப்பட்ட உணவு, வெறும் சாதமும், உப்பும் தான். இதை, உடன் சென்ற பத்திரிகையாளர்களிடம் காட்டிய எம்.பி., லாக்கெட் சாட்டர்ஜி, கடும் கோபம் அடைந்தார்.

அவர் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்க, மத்திய அரசு போதுமான அரிசி, தானியங்கள், சமையல் சாமான்களை வழங்குகிறது. ஆனால், அவற்றை, திரிணமுல் காங்கிரசார் கொள்ளை அடித்து விடுகின்றனர். மாநிலம் முழுவதுமே இது போன்ற நிலைமை தான் காணப்படுகிறது. வெறும் சாதத்தை வடித்து, மாணவர்களுக்கு வழங்குகின்றனர்.இதை தடுக்க வேண்டும். இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த விவகாரம், செய்தி ஊடகங்களில் வெளியானதும், மாநில கல்வி அமைச்சர், பார்த்தா சாட்டர்ஜி, வெறும் சாதம் மட்டும் வழங்கிய பள்ளியின், மதிய உணவு அலுவலர்கள், ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.பா.ஜ., - எம்.பி., லாக்கெட் சாட்டர்ஜி, வங்க மொழியின் பிரபல நடிகையாக இருந்தவர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-ஆக-201912:38:44 IST Report Abuse
skv srinivasankrishnaveni மமதாவின் மமடைக்கு வந்தாச்சு அழிவு ஏழைக்குழந்தைகளுக்கு வயத்துல மண்ணைப்போட்டுட்டுய்வ மீனும் சோறும் கடையே டீயும் குடிக்கிறாளா பிரெஞ்சுபோராட்ச்சியேதான் வெடிக்கப்போவுதுமேக்கு வாங்கதி ளே
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
23-ஆக-201905:28:09 IST Report Abuse
Ray மதிய உணவு வழங்க, மத்திய அரசு போதுமான அரிசி, தானியங்கள், சமையல் சாமான்களை வழங்குகிறது. என்று சொல்கிறாரே இங்கே தமிழ்நாட்டில் கூட தருகிறார்களா?
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
22-ஆக-201912:54:27 IST Report Abuse
Jayvee இலவசம் மக்களை ஏழையாக வைத்து அரசியல் அதிகார வர்க்கத்தை பணக்காரர்களாக (மேலும் மேலும்) ஆக்குகிறது .. உதாரணம் .. கலைஞர் இலவச தொலைக்காட்சி திட்டம். SCV கூடுதல் வருமானம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X