பொது செய்தி

இந்தியா

ஏ.டி.எம்., கார்டுகள் ரத்து எஸ்.பி.ஐ., முடிவு

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
 ஏ.டி.எம்., கார்டுகள், ரத்து,எஸ்.பி.ஐ., முடிவு

மும்பை, வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கவும், பொருட்கள் வாங்கவும் பயன்படுத்தும் 'டெபிட் கார்டு' எனப்படும், வங்கி அட்டைகளை, முழுவதுமாக ரத்து செய்ய, எஸ்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.

வங்கி அட்டைகளுக்கு பதிலாக, 'யோனோ' எனப்படும், 'டிஜிட்டல்' மெய்நிகர் அட்டைகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில், வங்கி இறங்கி உள்ளது.இது குறித்து, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி.ஐ., தலைவர், ரஜினீஷ் குமார்பேசியதாவது:

நாட்டில், மொத்தம், 90 கோடி 'டெபிட் கார்டு'களும், மூன்று கோடி, 'கிரிடிட் கார்டு'களும் பயன்பாட்டில் உள்ளன. இந்த டெபிட் கார்டுகள் பயன்பாட்டை, முழுவதுமாக ஒழிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு பதில், 'யோனோ' என்ற 'மொபைல் போன்' செயலி, அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஏ.டி.எம்.,களில் பணப் பரிவர்த்தனை செய்ய, பொருட்கள் வாங்க, வாடிக்கையாளர்கள், இந்த செயலியை பயன்படுத்தலாம்.இதன் மூலம், வங்கி அட்டை பயன்பாட்டை முழுவதுமாக ரத்து செய்து, 'விர்சுவல் கார்டு' எனப்படும், மெய்நிகர் அட்டைகளை அறிமுகப்படுத்த, எஸ்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, ஏற்கனவே, 68 ஆயிரம், 'யோனோ' மையங்கள் துவங்கப் பட்டு உள்ளன. இன்னும், ஒன்றரை ஆண்டுகளில், இதன் எண்ணிக்கை, 10 லட்சமாக உயர்த்தப்பட உள்ளன.

மேலும், 'யோனோ' செயலியில், ஒரு சில பொருட்களுக்கு, கடன் வசதி திட்டமும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், 'பிளாஸ்டிக்' வங்கி அட்டை பயன்பாடு பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு, மெய்நிகர் அட்டைகளை மக்கள் பயன்படுத்த துவங்கி விடுவர். இவ்வாறு, அவர் பேசினார்.இதையடுத்து, எஸ்.பி.ஐ., துவங்கி உள்ள இந்த டெபிட் கார்டு ரத்து நடவடிக்கையை மற்ற வங்கிகளும் விரைவில் பின்பற்ற துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
21-ஆக-201918:06:15 IST Report Abuse
Arasu இந்தியாவின் மிக பெரிய வங்கி SBI ....ஆனால் இப்போது ஒரு டுபாகூர் பேங்க் ஆகி விட்டது
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21-ஆக-201910:22:58 IST Report Abuse
Mirthika Sathiamoorthi அதெல்லாம் சரிங்க குறைந்த வைப்புத்தொகை சேமிப்பு கட்டணத்தில் இல்லையென்றால் அபராத தொகை வசூலிக்கும் முறையை எப்போ கைவிடப்போறீங்க...?
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-ஆக-201917:17:13 IST Report Abuse
ஆரூர் ரங்இன்னொரு ஓசி படலம். குறைந்த பட்ச இருப்புத்தொகை எத்தனையோ நாட்களாக கட்ட்டயமாக உள்ளது .அந்த தொகைகூட வேண்டாம்னு சொன்னா உங்களுக்கு ஓசில ஏ டி எம் கார்ட், ஓசில செக்புக் கொடுத்தே பாங்க் போண்டியாயிடும் மாநகரங்களில் வங்கிக்கட்டிட வாடகை எவ்வள்வு தெரியுமா?...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21-ஆக-201918:31:37 IST Report Abuse
Mirthika Sathiamoorthiநாங்க எங்க கேட்டோம் செக் புக்கு எ டீ ம் கார்டு? கையெழுத்து போடா தெரியாத எனக்கு எதுக்கு செக்கு புக்கு எழுத படிக்க தெரியாத எனக்கு எதுக்கு எ டீ ம் கார்டு ? முதியோர் உதவித்தொகை வங்கியில் செலுத்துவதால் எனக்கு அக்கௌன்ட் வேணும்...அதையும் மாச மாசம் பணம் போடா முடியாம, அபராதம்ன்னு புடிங்கிட்டா...? உங்க பாங்கு வாடகைக்கு என்காசுதான் கெடைச்சதா? பாங்கு போண்டியாயிடும்ன்னு கவலைப்படும் வாங்கி ஊழியரே என்னமாதிரி பலபேர் இங்க போண்டியாயிடு இருக்கோம் ...சொன்ன ஓசி பாடலாம்ங்கறாங்க....எங்களுக்கு அக்கௌன்ட் வேண்டாம்ன்னு சொல்றோம்..அப்புறம் எங்களுக்கு எதுக்கு ATM கார்டு? செக் புக்கு ?..எப்பவும் போல காசை கையில கொடுத்துடுங்க எங்களுக்கு எதுக்கு உங்க பொல்லாப்பு....பேங்கில போடச்சொல்லி நாங்களா கேட்டோம்....நீங்களா போட்டுட்டு, பாங்கு போண்டியாயிடும், வாடகை எவ்வளவு தெரியுமான்னு வியாக்கியானம் வேற...முடியல...
Rate this:
Cancel
swega - Dindigul,இந்தியா
21-ஆக-201910:15:20 IST Report Abuse
swega எங்கடா இப்படி கொல்றீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X