பொது செய்தி

இந்தியா

தனியார் மயமாகின்றன இரண்டு தேஜஸ் ரயில்கள்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (18)
Advertisement
 தனியார் மயம்,இரண்டு ,தேஜஸ் ரயில்கள்

புதுடில்லி, குறிப்பிட்ட ரயில்களை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ், ஆமதாபாத் - மும்பை சென்ட்ரல் - தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் டில்லி - லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சோதனை அடிப்படையில் தனியார் மூலம் இயக்கப்பட உள்ளன.உலகத் தரம் வாய்ந்த வசதிகளை தரும் வகையில், குறிப்பிட்ட ரயில்களை, தனியார் மூலம் இயக்குவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சலுகை கிடையாது பிரதமர், மோடி தலைமையிலான அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்ற, 100 நாட்களுக்குள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள திட்டங்களில் இதுவும் ஒன்று.அதன்படி, ஆமதாபாத் - மும்பை சென்ட்ரல், தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் டில்லி - லக்னோ, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ரயில்வேயின் துணை அமைப்பான, ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்படும். இந்த ரயில்களில், எவ்வித கட்டண சலுகையோ, ரயில்வே ஊழியர்களுக்கான சலுகையோ கிடையாது.

கட்டணம்இந்த ரயில்களின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்படும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இணையாக, இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேம்படுத்தப்படும். இதைத் தவிர கூடுதல் வசதிகளையும், ஐ.ஆர்.சி.டி.சி., மேற்கொள்ளலாம்.பயணியர் கட்டணத்தையும், ஐ.ஆர்.சி.டி.சி., நிர்ணயித்து கொள்ளலாம். அதே நேரத்தில், ரயில்வேயின் இன்ஜின், டிரைவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த ரயில்கள் தனியார் மூலம் இயக்கப்படுவதால், அந்த நிறுவனங்களின் பெயர்களில் இயக்க அனுமதிக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஆக-201900:29:03 IST Report Abuse
Pugazh V ரயில் சேவைகளை இத்தனை வருடங்கள் அனுபவித்து விட்டு சிறிதளவு நன்றி கூட இல்லாமல் ரயில்வே ஊழியர்களைத் திட்டுவது மோசமான செரல். ஒரு மணிநேரம், ஒரே ஒரு மணி நேரம் சென்னை சென்ட்ரலின் அனைத்து டிக்கெட் கவுண்டர்களும் மூடப்பட்டால் தெரியும், அவர்களின் சேவை மற்றும் வேலை எத்தனை முக்கியம் மற்றும் கஷ்டம் என்பது.
Rate this:
Share this comment
Cancel
21-ஆக-201913:21:52 IST Report Abuse
பச்சையப்பன் ரயில் என்ன ரயில். இன்னும் கொஞ்ச நாளில் நாடே தனியார் மயம் ஆகி விடும்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
21-ஆக-201911:28:48 IST Report Abuse
Rajan "இந்த ரயில்களில், எவ்வித கட்டண சலுகையோ, ரயில்வே ஊழியர்களுக்கான சலுகையோ கிடையாது" இதை ஊத்தி மூட MLA , MP , மந்திரி , போதும் .ஊழியர்களுக்கு மட்டும் சலுகை கிடையது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X