பொது செய்தி

தமிழ்நாடு

'பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம்'

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை, -''நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், இரண்டாவது இடத்தில், தமிழகம் உள்ளது,'' என, தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் தெரிவித்தார்.தொழில் சார்ந்த துறைகளில், தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுதல் குறித்து, தொழில் துறை அதிகாரிகளுக்கான, இரண்டு நாள் பயிலரங்கம், சென்னை, சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில், துவங்கியது.அமைச்சர், எம்.சி.சம்பத் பேசியதாவது:தமிழகம்,
 'பொருளாதார, வளர்ச்சியில், தமிழகம், இரண்டாவது, இடம்'

சென்னை, -''நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், இரண்டாவது இடத்தில், தமிழகம் உள்ளது,'' என, தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தொழில் சார்ந்த துறைகளில், தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுதல் குறித்து, தொழில் துறை அதிகாரிகளுக்கான, இரண்டு நாள் பயிலரங்கம், சென்னை, சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில், துவங்கியது.அமைச்சர், எம்.சி.சம்பத் பேசியதாவது:
தமிழகம், தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதில், தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தொழில் துறையில் முன்னேறிய மற்றும் தொழில் துவங்க உகந்த மாநிலமாகவும், தமிழகம் உள்ளது.சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாத, சாலை, ரயில், கப்பல் போக்குவரத்து வசதி உடைய மாநிலமாகவும் உள்ளது.மேலும், 37 ஆயிரத்து, 720 தொழிற்சாலைகளுடன், எண்ணிக்கையில், இந்திய அளவில், முதல் இடத்தில் உள்ளோம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், மகாராஷ்டிராவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ளோம்.போட்டி உலகில், தமிழகம் முன்னேறி வருகிறது. 5,000 ஏக்கர் பரப்பளவில், புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும், புதிய விமான நிலையம் அமைக்கவும், இடம் பார்த்து வருகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை செயலர், என்.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவன தலைவர், ரமேஷ்சந்த் மீனா, தொழில் வளர்ச்சி நிறுவன இயக்குனர், ஜெ.குமரகுருபரன் உட்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
21-ஆக-201911:36:31 IST Report Abuse
RM GST tax collection 4th place. All TN tax is being used for north Indian states. But for water from other states no one cares. Stepchildren treatment towards TN by BJP is a truth. தமிழன் வாழவைப்பவன். ஏமாளி.
Rate this:
Cancel
Ramesh - Chennai,இந்தியா
21-ஆக-201911:08:31 IST Report Abuse
Ramesh ஏட்டில் மட்டுமே
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
21-ஆக-201907:03:51 IST Report Abuse
Yezdi K Damo சேலம் ,சென்னை எட்டு வழி சாலை போட்டுட்டா போதும் தமிழ்நாட்டு பொருளாதாரம் எங்கேயோ பிச்சிகிட்டு போகும் .
Rate this:
Karunan - udumalpet,இந்தியா
21-ஆக-201909:28:25 IST Report Abuse
Karunanயாரு பொருளாதாரமுங்க?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X