சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: ஆக.,23ம் தேதி விசாரணை

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement
டில்லி ஐகோர்ட், சிதம்பரம், முன் ஜாமின், மனு தள்ளுபடி

புதுடில்லி: முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை நாளை மறுநாள்(ஆக.,23) அன்று விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் எடுத்து கொள்கிறது. அவருக்கு முன்ஜாமின் கிடைக்குமா என்பது அன்று தெரிந்துவிடும். இதன் இடையே, அவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த முறையீடு நீதிபதி ரமணா முன்னர், விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட அவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விற்கு அனுப்பினார்.


மீண்டும் முறையீடு


சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் குறைபாடு உள்ளதாகவும் அதனை சரி செய்யும்படி பதிவாளர் தரப்பில் கூறப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால், சிதம்பரம் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். சிபிஐ சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், மீண்டும் நீதிபதி ரமணா முன் மீண்டும் முறையிட்டார்.


திட்டவட்டம்


அப்போது நீதிபதி ரமணா, சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை இல்லை. மனுவில் உள்ள குறைபாட்டை சரி செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். சிதம்பரம் மனு பட்டியலிடப்பட்ட பின்னரே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனக்கூறினார்.

சுப்ரீம் கோர்ட் பதிவாளர், தலைமை நீதிபதியிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. இதனால், பட்டியலில் சேர்க்க முடியாது எனக்கூறினார். பிழைகள் திருத்தப்பட்டாலும் பட்டியலில் சேர்க்கப்படாத மனுவை விசாரிக்க முடியாது என நீதிபதி ரமணா திட்டவட்டமாக கூறி விட்டார்.

முன்னதாக, சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், தங்களுக்கு வேறு வழியில்லை. தப்பிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என சிதம்பரமே கூறி விட்டதால் அவரது முன்ஜாமின் மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என வாதிட்டுள்ளார்.


ஆலோசனை


நீதிபதி ரமணா 2வது முறையாக மனுவை விசாரிக்க மறுத்ததையடுத்து மாலை 4 மணிக்கு, அயோத்தி வழக்கு விசாரணை முடிந்த பிறகு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் மீண்டும் முறையிட முடிவு செய்திருந்தது. ஆனால், அயோத்தி வழக்கு விசாரணைக்கு பின்னர், அந்த அமர்வு கலைந்து சென்றது.
தலைமை நீதிபதி தனது அறைக்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து தலைமை நீதிபதியுடன், பதிவாளர் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், பதிவாளருடன், சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள்(ஆக.,23) விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


லுக் அவுட் நோட்டீஸ்


சிதம்பரம் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசை அமலாக்கத்துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
21-ஆக-201921:34:09 IST Report Abuse
அம்பி ஐயர் “கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக டில்லியில் அவர்கள் வசிக்கும் ரூ.16 கோடி மதிப்பிலான பங்களா, ஸ்பெயினில் ரூ.15 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் பார்சிலோனியாவில் உள்ள டென்னிஸ் கிளப், அத்துடன் சென்னை நுங்கம்பாக்கம் ஐஓபி வங்கி கிளையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ.9.23 கோடி, ரூ.90 லட்சம் மதிப்பிலான எப்டி., வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தில் பங்குகள் வாங்கி உள்ளனர். இந்த பங்குகளை விற்று அதன் மூலம் ரூ.41 கோடி பணம் ....” நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க வந்ததாகக் கூறிக் கொள்ளும் இவர்களுக்கு எதற்கு இத்தனை கோடிகளுக்கான சொத்துக்கள் அதுவும் வெளி நாடுகளில் வாங்கிக் குவிக்க வேண்டும்....???
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
21-ஆக-201920:27:06 IST Report Abuse
spr "அவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. " மல்லையா இவருக்கு அறிவுரை சொல்லியிருப்பாரோ ஆனாலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்துறை நிதித்துறை அமைச்சராக மத்திய அரசில் இருந்த ஒருவர் தேடப்படும் கைதியாக அறிவிக்கப்பட்டது போன்ற அவமானம் இவருக்குத் தேவையா சுதந்திர போராட்டத்தில் சிறை சென்ற காங்கிரசின் ஒரு முந்தைய அமைச்சர் இப்பொழுது நிதி மோசடி குற்றவாளியாக தேடப்படும் நபராக உள்ளார் என்பதே பெருத்த அவமானம் உள்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் முறையாகச் செயல்பட்டால் அதிகாரிகளும் நீதிபதிகளும் ஒழுங்காக செயல்படுவார்கள் என்று இதனால் அறியப்படுகிறது இனி சி பி ஐ மற்றும் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் செயல்பாடு சீராக்கப்படும் என்று நம்பலாமா
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
21-ஆக-201920:11:48 IST Report Abuse
வல்வில் ஓரி தாத்தா...இன்னும் ரெண்டே நாளு தான் ..பதுங்கு குழிக்குள்ள இருந்து வெளிய வந்துறாதே... ...அப்புறம் பார்த்துக்கிடலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X