அமலாக்கத்துறை விசாரணை ராஜ் தாக்கரே 22-ம் தேதி ஆஜர்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement
அமலாக்கத்துறை விசாரணை ராஜ் தாக்கரே நாளை ஆஜர்

மும்பை,மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, பண பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, அமலாக்க துறை அலுவலகத்தில், நாளை (22-ம் தேதி) விசாரணைக்குஆஜராகிறார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் உறவினரும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவருமான, ராஜ் தாக்கரே மீது, 'ஐ.எல்., அண்ட் எப்.எஸ்.,' என்ற நிறுவன முதலீடு தொடர்பாக, பண பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கு விசாரணைக்காக, நாளை நேரில் ஆஜராகுமாறு, ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்க துறை 'நோட்டீஸ்' அனுப்பியது.





அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ராஜ் தாக்கரே மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் குற்றம்சாட்டினர். தானே மாவட்டத்தில், நாளை ஒரு நாள், முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.இந்நிலையில், கட்சி தலைவர்களை அழைத்து, ராஜ் தாக்கரே, ஆலோசனை நடத்தினர். பின்னர், வழக்கு விசாரணைக்காக, அமலாக்க துறை அலுவலகத்தில், ராஜ் தாக்கரே, நாளை (22-ம் தேதி) ஆஜராகிறார் என, அக்கட்சி அறிவித்தது.இதையடுத்து, 'கட்சி தொண்டர்கள் யாரும், போராட்டங்களிலோ, வன்முறை சம்பவங்களிலோ ஈடுபட கூடாது' என, ராஜ் தாக்கரே, வேண்டுகோள் விடுத்தார்.மேலும், தானே மாவட்டத்தில், நாளை நடைபெறுவதாக இருந்த முழு அடைப்பு போராட்டத்தை, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர், வாபஸ்' பெற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
21-ஆக-201910:10:20 IST Report Abuse
TamilArasan அங்கு நடை பெரும் BJP அரசு வலிமையுடன் அசுர பலத்தில் உள்ளது - இந்த பெருச்சாளி கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கிட்ட பணம் வாங்கி கொண்டு மோடிக்கு எதிராக எவ்வளவோ கத்தி கதறி காங்கிரசுக்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்தும் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதி கூட வெற்றிபெற இயலவில்லை - தற்போது போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று இறங்கினால் பிதுக்கி விடுவார்கள் என்று தெரியும் ஆதலால்தான் பந்தை வாபஸ் வாங்கி இருக்கு இந்த காங்கிரஸ் கூட்டு பெருச்சாளி...
Rate this:
Share this comment
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
21-ஆக-201908:20:22 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga உப்பை தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். ஊழல் அரசியல் வாதிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். இதே ஒரு சாதாரண குடிமகன் செய்தால் விட்டுவிடுவார்களா. அதுவும் ஒரு மாநில கட்சியின் தலைவர். அப்போதுதான் மற்றவர்கள் தவறு செய்வது குறையும். எதெற்கெடுத்தாலும் போராட்டம், கலவரம் என்று கூறும் ராஜ் தாக்கரே போன்றவர்கள் அவர் விசாரணை அலுவலகம் செல்லும்போது அமைதி காக்கவேண்டும் என்று கூறும்போதே "நீங்கள் கலவரம் செய்யுங்கள்" என்று வேண்டுகோள் விடுப்பது போல சொல்கிறார். மக்கள் மாற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
21-ஆக-201906:45:08 IST Report Abuse
வல்வில் ஓரி அரசாங்க கொள்கை முடிவுகளுக்கு எதிராக சவுண்டு விட்ட பயலுக எல்லாவனும் வேற எதோ வகையில கிரிமினல் லா தான் இருக்கான்யா அதை மறைக்க தான் அரசியலே நடத்துறான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X