கோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி:'உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த ராமர் கோவிலை இடித்துதான், அங்கு பாபர் மசூதி கட்டினர்' என, புதிய ஆதாரங்களுடன், 'ராம் லல்லா விரஜ்மான்' சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்
 கோவிலை, இடித்து தான், மசூதி, கட்டினர்,அயோத்தி, வழக்கில் சாட்சியங்களுடன், வாதம்

புதுடில்லி:'உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த ராமர் கோவிலை இடித்துதான், அங்கு பாபர் மசூதி கட்டினர்' என, புதிய ஆதாரங்களுடன், 'ராம் லல்லா விரஜ்மான்' சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.விசாரணையின், எட்டாவது நாளான நேற்று, ராம் லல்லா விரஜ்மான் சார்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ். வைத்தியநாதன், பல்வேறு ஆதாரங்களுடன் வாதிட்டார்.

அவர் வாதிட்டதாவது:அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில்தான், ஹிந்துக் கடவுள் ராமர் பிறந்தார் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. இதற்கு, பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, தொல்லியல் துறையின் ஒரு அறிக்கையின்படி, இந்த இடத்தில் ஹிந்துக் கோவில் இருந்தது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. முதலை, ஆமை போன்றவற்றின் உருவங்கள் உள்ள கற்கள் அந்த இடத்தில் இருந்துள்ளது. முதலை, ஆமை போன்றவற்றை, முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை.இதில் இருந்தே, இங்கு, ஹிந்துக் கோவில் இருந்தது உறுதியாகி உள்ளது.
அங்கு பாபர் மசூதி அளவுக்கு மிகப் பெரிய கோவில் இருந்ததா என்பது தெரியவில்லை; ஆனால், அங்கிருந்த கோவில் சிறியது அல்ல என்பது மட்டும் உறுதியாகி உள்ளது. மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அப்பகுதியில் மீட்கப்பட்ட பல கற்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றில், முஸ்லிம்கள் மத நம்பிக்கையில் இல்லாத, ஹிந்துக்கள் மத நம்பிக்கையில் உள்ள சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பல கல்வெட்டுகள், சமஸ்கிருதத்தில் இருந்தன. இவற்றில் இருந்து, அங்கிருந்த ராமர் கோவிலை இடித்து தான், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது.இவ்வாறு, அவர் வாதிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
21-ஆக-201916:35:03 IST Report Abuse
DSM .S/o PLM Ashak - Jubail,சவுதி அரேபியா ...அவரவர் இஷ்டத்திற்கு எதையாவது எழுதுவது, அதற்கு ஆதாரம் கேட்டால் அங்கே படித்தேன் இங்கே பார்த்தேன் வாட்சப்பில் வந்தது என்று பிதற்றுவது.. இதுதான் இன்றைய அமைதி மார்க்க மாண்டூகங்களின் நிலைப்பாடு. இவனுங்களுக்கு இவனுக மதத்தினர் செய்த எல்லா அட்டூழியங்களும் தெரியும். இவனுக மதத்தவர்களை போன்ற மூர்க்க தனமான காட்டு மிராண்டிகள் உலகில் வேறு எங்கேயும் இல்லை என்பதும் தெரியும்.. இவர்களுக்கு சப்பை கட்டுக்கட்ட எடுத்து கொடுக்க படுகின்ற , இந்து மதம் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை திக போன்ற இயக்கத்தவர்களால் இட்டுக்கட்ட பட்டவை என்பதும் தெரியும்.. இருந்தாலும், முட்டு கொடுத்து பார்ப்போமே.. வாதத்திற்கு வரப்போவதில்லை, சும்மா ஒரு புரளியை கிளப்பி வைக்கலாம் நம்மளை மாதிரி வெட்டியாக பிதற்றி கொண்டு திரிவோருக்கு உதவுமே என்கிற எண்ணம்தான். ப சிதம்பரம் தன்னை நிரபராதி என்று சொல்லி கொள்வது , அதற்கு பிரியங்கா போன்றவர்கள் சப்பை கட்டு கட்டுவது போல ..
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஆக-201916:26:02 IST Report Abuse
Endrum Indian இது என்ன பெரிய ஐன்ஸ்ட்டின் ஆராய்ச்சி இது கொஞ்சமாவது சுய அறிவு உள்ள எல்லோருக்கும் தெரிந்தது தானே 1) அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது உண்மை, அதை இடித்து, சரியா இடிச்சாங்களா, இல்லை அந்த பௌண்டேஷன் அப்படியே அதன் மேலே பாபர் மசூதி. 2) சரி அதில் தொழுகை நடந்ததா அதுவும் இல்லை ஆனால் அது முஸ்லிம்களின் தொழுகை இடம் என்று வெறும் வெத்து வெட்டு சவால்கள். இந்த கோர்டுக்கும் வேறே வேலையே இல்லாமல் இதை இழுத்துக்கொண்டே போகுமாம்?? இது இந்துக்களின் பூமி, அங்கே தான் ராமர் வாழ்ந்தார், ராமர் கோவில் இருந்தது என்றால் ஒண்ணும் கேள்வி கேட்காமல் சட்டு புட்டுன்னு தீர்ப்பு சொல்லிட்டு போயிட்டே இருக்கவேண்டியது தானே. இப்படி செஞ்சி செஞ்சே இந்த அநீதிமன்றங்களில் 4.02 கோடி வழக்குகள் தேக்கம் இன்று வரை???இதெல்லாம் நடந்து தீர்ப்பு வந்து???இன்னும் ஒரு 402 வருஷமாவாது ஆகும் அதுக்குள் 402 கோடி வழக்குகள் கூட நிலுவையில் இருக்கும் இந்த கோர்ட்டுகளில் அநத அளவுக்கு கேவலமாக செல்கின்றது அநீதிமன்றங்கள் கேஸ் கையாளும் விதத்தை பார்த்தால்??/
Rate this:
Cancel
deep - Chennai,இந்தியா
21-ஆக-201912:07:56 IST Report Abuse
deep Ashak. உங்களுக்கு வெட்கமும் இல்லை. சரித்திர அறிவும் இல்லை. புத்த மடாலயங்களை இந்துக்கள் இடித்தார்களாம். பிறமதத்தின் வழிபாட்டுத்தலங்களை இடிப்பது, பிற மதத்தினரைக் கொன்று அவர்கள் பெண்களை கற்பழித்து, அடிமைகள் ஆக்குவது இதையெல்லாம் மதநூலின் பெயரால் செய்வது எந்த மதம் என்று உலகமே அறியும். பாலைவன காட்டுமிராண்டிகள் தங்கள் கொடூரச் செயல்களைப் பற்றி தாங்களே பெருமையாக() எழுதி வைத்திருக்கிறார்கள். கோயில்களை இடித்துத் தூளாக்கியது மட்டுமல்ல, நாளந்தா போன்ற அறிவுக்கருவூலத்தை எரித்த பெருமையும் அவர்களுக்கே. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அவர்களுக்கு புனிதர் பட்டம் தராதீர்கள். மனச் சாட்சி என்பதே இல்லையா உங்களுக்கு? உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு அகழ்வாராய்ச்சியாளர்தான் இந்துக்கோயிலை இடித்துத் தான் பாபர் மசூதியை கட்டப்பட்டது என அறிக்கை கொடுத்திருக்கிறார். அவர் மனிதர். நீங்கள்?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X