சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்த கொள்ளையன் மடக்கி பிடித்த வீர தம்பதி

Added : ஆக 21, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வீடு புகுந்த, கொள்ளையன், மடக்கி, பிடித்த, வீர தம்பதி

தஞ்சாவூர்:வீட்டில் திருட வந்த கொள்ளையனை, மடக்கி பிடித்த தம்பதியை, பலரும் பாராட்டி
வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனியப்பன், 61; கடலை வியாபாரம் செய்து வரும் இவரது மனைவி இந்திரா, 50. இவர்கள், மகன் குமரேசனுடன், நேற்று முன்தினம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ஊர் திரும்பினர்.

அப்போது, வீட்டின் வெளிப்புற கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே செல்ல முயன்ற போது, வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் ஒருவர், வெளியே வேகமாக ஓடி வந்துள்ளார்.

அவரை பிடிக்க முயன்ற, பழனியப்பனை கீழே தள்ளிவிட்டு, மர்ம நபர் ஓட முயன்றார். வீட்டு வாசலில் நின்ற இந்திரா, ஓடி வந்த கொள்ளையன் மூக்கில், கையால் ஓங்கி குத்தியுள்ளார். நிலைகுலைந்த கொள்ளையனை, பழனியப்பன், இந்திரா மற்றும் குமேரசன் ஆகிய மூவரும் பிடித்து, சத்தம் போட்டுள்ளனர்.

ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், கொள்ளையனை பிடித்து, சுத்தியல், கம்பி மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட பணம், ஒரு செயின் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.ஒரத்தநாடு போலீசார் விசாரணையில், திருட வந்தது, தஞ்சையைச் சேர்ந்த ராஜேந்திரன், 57, என்பது தெரிந்தது. கொள்ளையனை தாக்கி பிடித்த தம்பதியை, போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
21-ஆக-201910:27:45 IST Report Abuse
TamilArasan எல்லாம் நெல்லை தம்பதிகள் திருடர்களுடன் நடத்திய போராட்டத்தின் தைரியம்தான் - இந்த தம்பதிகளுக்கும் அரசு பரிசு கொடுத்து கௌரவப்படுத்த வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X