கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளில் மண் அள்ள தடை கோரி வழக்கு

Added : ஆக 21, 2019
Share
Advertisement

மதுரை : மதுரை மாவட்ட நீர்நிலைகளில் துார்வாருகிறோம் என்ற பெயரில் மண் அள்ள தடை கோரிய வழக்கில், கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் தி.மு.க.,-எம்.எல்.ஏ.,சரவணன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பானாங்குளம், நிலையூர், விளாச்சேரி, மண்டேலா நகர், பெருங்குடி, அயன்பாப்பாகுடி கண்மாய்களில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது. டிராக்டருக்கு பதிலாக பெரிய டிப்பர் லாரிகளில் மண் அள்ளுகின்றனர். அனுமதித்த அளவைவிட, அதிக ஆழத்தில் அள்ளுகின்றனர்.

கண்மாய்க் கரைகளை பலப்படுத்துல், விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக தனியார் குத்தகைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கண்மாய்களை முறையாக துார்வாராததால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும்.சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க வேண்டும். மண் அள்ள வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மதுரை கலெக்டக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

மதுரை மாவட்ட நீர்நிலைகளில் துார் வாருகிறோம் என்ற பெயரில் மண் அள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சரவணன் மனு செய்தார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு,'சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதுரை கலெக்டர், திருமங்கலம் ஆர்.டி.ஓ.,திருப்பரங்குன்றம் தாசில்தார், பொதுப்பணித்துறை பெரியாறு வைகை பாசன செயற்பொறியளர் செப்.,26 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X