ஒடிசா, கர்நாடகா, ஹிமாச்சலுக்கு ரூ.4,432 கோடி ஒதுக்கீடு

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : கடந்த, 2018 - 19 நிதியாண்டில், இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, ஒடிசா, கர்நாடகா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசமாநிலங்களுக்கு, கூடுதலாக, 4,432 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



latest tamil news




latest tamil news



கடந்த, 2018 - 19 நிதியாண்டில், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தலைமையிலான, உயர்நிலை கூட்டம் நேற்று நடந்தது.மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், வேளாண் அமைச்சர், நரேந்திர சிங் தோமர், உள்துறை, நிதி, வேளாண் துறை மற்றும் அரசுக்கு ஆலோசனை வழங்கும் 'நிடி ஆயோக்' அமைப்பின் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.


latest tamil news



கூட்டத்திற்கு பிறகு, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:கடந்த நிதியாண்டில், ஒடிசாவில், போனிபுயலால் கடும் பாதிப்புஏற்பட்டது. கர்நாடகாவில், கடும் வறட்சி ஏற்பட்டது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு, பனிச்சரிவு மற்றும் பனிப் புயல் பாதிப்பு ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக, ஒடிசாவுக்கு, 3,338 கோடி ரூபாய், கர்நாடகாவுக்கு, 1,029 கோடி ரூபாய், ஹிமாச்சலப்பிரதேசத்துக்கு, 64 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.


latest tamil news



மாநில பேரிடர் மீட்பு நிதிக்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தவிர,இந்த நிதி, தேசிய பேரிடர் மீட்பு நிதியில்இருந்து கூடுதலாக ஒதுக்கப்படும்.கடந்த, நிதியாண்டில், அனைத்து மாநிலங்களுக்கும், 9,658 கோடி ரூபாய், மாநில பேரிடர் மீட்பு நிதிக்கு ஒதுக்கப்பட்டது. இந்தாண்டில் இதுவரை, 6,104 கோடி ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
21-ஆக-201910:26:35 IST Report Abuse
hasan தமிழ்நாட்டிற்கு காஜா புயல் ஒக்கி புயல் நிவாரணம் வந்து விட்டதா
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-ஆக-201907:55:35 IST Report Abuse
ஆரூர் ரங் பெரும்பாலான இயற்கைசீற்ற சேதங்கள் மாநில அரசின் பொறுப்பற்ற செயல்கள் ஆக்கிரமிப்புகள் , திட்டமிடப்படாத வளர்ச்சி போன்றவற்றின் விளைவே.பொறுப்பற்று செயல்படும் மாநிலங்களுக்கு நிவாரண நிதியளித்தாலும் பொறுப்பற்றே செலவழிப்பர்.வெள்ளபாதிப்பின் காரணிகளை சரிப்படுத்தாவிட்டால் அடுத்து எதற்குமே நிவாரணம் கொடுக்கமாட்டோம் என மத்திய அரசு உறுதியான கொள்கைமுடிவை அறிவிக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X