இந்தியா - லாட்வியா உறவில் புதிய அத்தியாயம்

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

ரிகா: ஐரோப்பிய நாடான லாட்வியா சென்றுள்ள, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர், எகில்ஸ் லெவிட்சை சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, பேச்சு நடத்தினார்.



latest tamil news



துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, ஐந்து நாள் அரசு முறை பயணமாக, ஐரோப்பிய நாடுகளான, லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லிதுவேனிய பயணத்தை முடித்து, நேற்று முன்தினம், லாட்வியா வந்தார். தலைநகர் ரிகாவில், அந்நாட்டு அதிபர், எகில்ஸ் லெவிட்சை, நேற்று சந்தித்து பேசினார்.


latest tamil news



அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, கூறியதாவது: இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், கலாசாரம், கல்வி மற்றும் பொருளாதார உறவில் சிறப்பு கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. லாட்விய மக்கள், ஆயுர்வேதம், யோகா, இந்திய உணவு, கலாசாரம் மற்றும் சினிமா ஆகியவற்றில், அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.


latest tamil news



லாட்விய கலாசாரம் மற்றும் சினிமா மீது, இந்திய மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனது இந்த பயணம் மூலம், இருநாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய அத்தியாம் துவங்கி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
21-ஆக-201909:56:51 IST Report Abuse
சீனி நல்ல செய்திதான், இந்தியா ஐநாவில் நிறந்தர உறுப்பினராக பல சிறிய நாடுகளின் ஆதரவு முக்கியம். அவங்க ஊர் சாக்லெட் மற்றும் மீன் மிக அருமையாக இருக்கும், நம்ம டீ,காபி, மசாலா அவங்களுக்கு அருமை. எனவே பொருளாதார ஏற்றுமதி முயற்ச்சியில் ஈடுபடவேண்டும்.
Rate this:
Cancel
21-ஆக-201909:55:48 IST Report Abuse
பச்சையப்பன் ஆகா ஆகா !! லாட்வியா 109 கோடி மக்கள் வசிக்கும் தேசம். அடடா எப்பேர்ப்பட்ட உறவு. ஓகோ ஓகோ.
Rate this:
Cancel
TRUMAN - MADURAIPAKKAM,இந்தியா
21-ஆக-201907:37:23 IST Report Abuse
TRUMAN இந்தியா ரொம்ப பெண்டாகி நிக்கிறது .... பார்க்க சகிக்கலே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X