வராந்தாவில் குழந்தை பெற்ற பெண்; உ.பி.,யில் சர்ச்சை

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement

பரூக்காபாத்: உத்தர பிரதேசத்தில், அரசு மருத்துவமனையில் இடம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண், மருத்துவமனை வளாகத்தில், அனைவர் முன்னிலையிலும் குழந்தை பெற்ற சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



உ.பி.,யில், உள்ள பரூக்காபாத் மாவட்டத்தில், ராம் மனோகர் லோஹியா அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானோர், இந்த மருத்துவமனையை நம்பி தான் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று, நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவர், பிரசவத்திற்காக, மருத்துவமனையில் சேர வந்தார். ஆனால், பிரசவ வார்டில், படுக்கை எதுவும் காலியாக இல்லை என கூறி, ஊழியர்கள், அவரை திருப்பி அனுப்பினர். இதனால் செய்வதறியாது மருத்துவமனையிலேயே நின்றிருந்த பெண்ணுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.


latest tamil news



இதையடுத்து, மருத்துவமனை வராந்தாவிலேயே, அந்தப் பெண், குழந்தையை பெற்றெடுத்தார். இதை, அங்கு நின்றிருந்த பலர், வேடிக்கை பார்த்தனர். அதில் ஒருவர், இந்த காட்சியை தன், 'மொபைல் போனில்' படம் பிடித்தார். இந்த 'வீடியோ' வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த, மாவட்ட கலெக்டர் மோனிகா ராணி, உத்தரவிட்டுள்ளார்.

இதே மருத்துவமனையில், 2017ல், ஒரே மாதத்தில், 49 குழந்தைகள் பலியாகினர். மருந்து மற்றும் 'ஆக்சிஜன்' குறைபாட்டால் குழந்தைகள் இறந்ததாக, பெற்றோர் குற்றம்சாட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-ஆக-201904:32:08 IST Report Abuse
Mani . V இதுதான் டிஜிட்டல் இந்தியா. இதை குறையாக சொன்னால் நம்மை தேசவிரோதி, தீவிரவாதி, ஆன்டி இன்டியன் என்பார்கள். அதுனால வந்தேமாதரம் பாரத் மாதா கி ஜெ என்று சொல்லிவிடுவோம்.
Rate this:
Cancel
Naga - Muscat,ஓமன்
21-ஆக-201915:16:58 IST Report Abuse
Naga மனது மிக மிக வேதனை படுகிறது.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-ஆக-201913:04:23 IST Report Abuse
ஆரூர் ரங் வீட்டுக்கு ஒண்ணோ ரெண்டோ போதும்னு அரசு வருஷமா கெஞ்சுது. ஆனால் எத்தனையாவது பிரசவம்னாலும் அரசு ஆஸ்பத்திரியில் உடனடியா இலவசமா பாக்கணும்னு நினைக்கிறாங்க. இவர்களே படுக்கைகளை நிறைந்தால் மற்றவர்கள் எங்கேபோவாங்க? ஒருஆண்டுக்குப் பிறக்கும் 2 கோடி குழந்தைகளுக்கும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பிரசவம் என்றுமே சாத்தியமில்லை. தமிழகத்திலேயே 50 % அரசு ஆஸ்பத்திரி பிரசவங்களை NURSEம் ஆயாவும்தான் பார்க்கிறாங்க. இதுக்காகத்தான் சுதந்திரதின உரையில் மோதி வேண்டுகோள் விடுத்தார். சில சிறுபான்மையினர் காதில் இது விழுவதில்லையே.
Rate this:
Rahim Gani - Karaikudi,இந்தியா
21-ஆக-201916:23:09 IST Report Abuse
Rahim Ganiவேஷம் போடாதீர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X