'பேஸ்புக்'குடன் ஆதார் இணைப்பா? மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: சமூக வலை தளமான, 'பேஸ்புக்' உடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரி, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரிய மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசு உள்ளிட்டோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


'சமூக வலைதளங்களான, 'பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர்' உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை அறிய, இவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும்' என, சென்னை, மும்பை மற்றும்மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


ஆபாச படங்கள்:

பொய்யான தகவல்கள் பரப்புவது, ஆபாச படங்கள் அனுப்புவது, வன்முறையைத் துாண்டும் வகையில் செய்திகளை பரப்புவதை தடுக்கும் வகையில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர், தங்களது ஆதார் எண்ணையும் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெறும் இந்த வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, இந்த சமூக வலைதளங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

நீதிபதிகள், தீபக் குப்தா, அனிருத்தா போஸ் அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால், வாதிட்டதாவது:சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றின் மீது, இதுவரை, 18 முறை விசாரணை நடந்துள்ளது. வழக்கின் விசாரணையை தொடர்வதற்கும், தீர்ப்பு அளிப்பதற்கும் தடை விதிக்கக் கூடாது. இவ்வாறு, அவர் வாதிட்டார்.

பேஸ்புக், வாட்ஸ்ஆப் சமூக வலைதளங்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்கள், முகுல் மோஹத்கி, கபில் சிபில் ஆகியோர் வாதிட்டதாவது: இந்த சமூக வலைதளங்கள், சர்வதேச நிறுவனங்கள். உலகெங்கும், 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இவை செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு, சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், 'வாட்ஸ்ஆப்' செயலி முழுவதும் பாதுகாப்பானது. அதை பயன்படுத்துவோர் மட்டுமே பார்க்க முடியும்.


சாத்தியமில்லை:

எங்களுடைய நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்களால்கூட, அதில் உள்ள செய்திகளை பார்க்க முடியாது. அதனால், பயனாளியின் விபரங்களை அளிக்க முடியாது.மேலும், இது போன்ற சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவோர் குறித்த தகவல் அளிப்பது என்பது, தனிநபர் தகவல்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழியை மீறுவதாக அமைந்துவிடும். அதனால், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை. இவ்வாறு, அவர்கள் வாதிட்டனர்.

அதைத் தொடர்ந்து, அமர்வு பிறப்பித்த உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள, இரண்டு வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம். ஆனால், தீர்ப்பு அளிக்கக் கூடாது. சமூகவலைதளங்கள் தாக்கல் செய்துள்ள மனு குறித்து, மத்திய அரசு மற்றும் சமூக வலைதளங்களான, 'கூகுள், டுவிட்டர், யூடியூப்' உள்ளிட்டவை, செப்., 13க்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு, அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Chennai,இந்தியா
21-ஆக-201914:45:48 IST Report Abuse
R S BALA மகாபிரபு(ஆதார் ) நீங்க இங்கயும் வந்துட்டீங்களா (பேஸ்புக் )
Rate this:
Share this comment
Cancel
21-ஆக-201913:52:57 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தடை செய்துவிடுங்கள் , இதென்ன பெரிய விஷயமா ? இதுபோன்ற பல சாப்ட்வேர்கள் இருக்கின்றன , இந்தியாவிற்கு என்று கூட பிரத்தியோகமாக ஒன்றை உருவாக்கலாம் , சீனா கூட இதை பயன்படுத்துவதில்லை.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
22-ஆக-201909:53:34 IST Report Abuse
Anandanஎதையும் உருப்படியா செய்ய தெரியாம நாட்டின் பொருளாதாரம் ஆடிக்கொண்டு இருக்கிறது இதில் இன்னொரு பேஸ்புக் பண்ண போறீங்களா, அட கடவுளே....
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
21-ஆக-201911:56:13 IST Report Abuse
Meenu வேறு எந்த நாட்டிலும் இல்லாத அடக்கு முறை இந்த நாட்டில் மட்டும் தான். பொய் சேதியை பரப்புவதாகவாம். மடியில் கணம் இருந்தால் வழியில் பயமிருக்கும்.
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
21-ஆக-201916:14:08 IST Report Abuse
DSM .S/o PLM நீ யோக்கியனாக இருந்தால் உன்னை பற்றிய விபரங்களை உனது சமூக வலைதள பக்கத்தோடு இணைக்க வேண்டியதுதானே.. எப்போதும் பினாமிபெயரில் போலிப்பெயரில் சுற்றி கொண்டிருப்பவனுக்கு தான் இதை பற்றியெல்லாம் கவலையிருக்கும். நேர்மை, உண்மை வெளிப்படை தன்மை உள்ளவரிடம் இதற்கு பயம் இருக்காது...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
22-ஆக-201909:54:22 IST Report Abuse
Anandanஜாதி பேரை போடுறவனெல்லாம் நேர்மை பேசுற அளவுக்கு கலி முத்திபோயிடுச்சு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X