சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள்

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி : நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் டில்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.





ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லிய ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து டில்லியில் உள்ள ப.சிதம்பரத்திற்கு வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நோட்டீசை வீட்டு வாசலில் ஒட்டிச் சென்றனர். சிதம்பரத்தின் இமெயில் முகவரிக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தும் இதுவரை சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகததால், சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு விசாரணை நடத்த மீண்டும் இன்று (ஆக.,21) காலை 8.10 மணி முதல் 8.45 மணி வரை வந்து சென்றனர்.
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பிச் சென்ற அதிகாரிகள், 4வது முறையாக மீண்டும் 9.35 மணியளவில் சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர். சிபிஐ அதிகாரிகள் அடுத்தடுத்து சிதம்பரம் வீட்டிற்கு வந்து செல்வதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





கடந்த 24 நேரத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அதிகாரிகள் 4வது முறையாக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டில்லி ஐகோர்ட் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளதால், முன்ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளார். சிதம்பரத்தின் மனு இன்று (ஆக.,21) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-ஆக-201911:16:32 IST Report Abuse
DARMHAR சோனியாவுக்கு மிக வேண்டியவர் ஒரு வேளை சோனியா வீட்டிலோ அல்லது பிரியங்கா வாட்ரா வீட்டிலோ அடைக்கலம் புகுந்திருக்கலாம் அல்லது ராகு ராம் ராஜன் வீட்டிலோ மறைந்து கொண்டிருக்கலாம்.ஊழல்பேருச்சாளி டில்லியிலேயே எங்கோ தான் மறைந்து கொண்டிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
21-ஆக-201910:42:21 IST Report Abuse
elakkumanan இந்த ஈர ஆனியன், தான் சுத்தமா இருந்தா, வலிய போயி, கேஸை சந்தித்து, தான் ஒரு சுத்த புடம் போட்ட தங்கம் என்றும், இந்த மோடிதான் என் மேலயும், ராசா மற்றும் பழமொழி மேலயும் பொய் கேஸ் போட்டார் னு நிரூபிக்க வேண்டியதுதானப்பு. நல்லா வக்கனையா, பெரிய சுத்த சுயம்பு லிங்கம் மாதிரி மைக் கெடச்ச ஒடனே பேசுற இல்லையா. இந்த சின்ன யோசனை ஏன் ஒன்னோட பெரிய புத்திக்கு தோணமாட்டேங்குது? உனக்கு முட்டு கொடுக்குற அதி யோக்கிய சிகாமணிகளுக்கும் ஏன் இந்த சின்ன யோசனை தோணமாட்டேங்குது? அயோத்தி கேசுல, அத்வானி மேல பொய் கேசு போட்டஉடனே, அவர் இது பொய் கேசு, அரசியல் பாலி வாங்கல் அப்படீன்னு எந்த தத்துவ விளக்கமும் கொடுக்கலை. உடனடியாய் பதவி விலகினார், பொய் கேசு என்று நிரூபித்தார். இதெல்லாம் அந்த அத்வானிக்காக கண்ணீர் விட்டு, அந்த சாக்குல மோடியை திட்டுன திருட்டு திராவிடால்ஸ்சுக்கு தெரியுமோ? அரசியல்னா, பாலி வாங்கும் நடவடிக்கை இருக்கத்தான் செய்யும். போர்க்களத்தில், குண்டு போடத்தான் செய்வாங்க. தெளிவா, (கட்டுமரம் மாதிரி ) போர் புரியனும். இல்லனா, நெஞ்சுரத்தோட (மோடி மேல நீங்க போடாத கேசாயா) எதிர்கொள்ளணும். சும்மா, 'ஐயோ கொல்றாங்க ' ன்னு தருதலைகள் மாதிரி கத்த கூடாது. போலி என்கவுண்டர் கேசேயெல்லாம் தாண்டித்தான், மோடிஜியும், அமிதாஷா ஜியும் வந்துருக்காங்க. திருட்டு, ஓடி ஒளியாதே.
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
21-ஆக-201914:14:33 IST Report Abuse
madhavan rajanஎதோ இவங்களால முடிஞ்சது இவங்க யார் மேலேயும் விசாரணை இல்லாம இவ்வளவு வருஷமா பாத்துக்கிட்டாங்க. இருந்த சில கேஸையும் (போபர்ஸ் போல) நீர்த்துப்போக செஞ்சாங்க. இப்பவும் பல விசாரணை அதிகாரிகளும், நீதிமன்றத்தில் பலரும் இவர்களுக்கு விசுவாசமா இருப்பதால் எல்லோரும் வெளியே இருந்து கூவுறானுங்க....
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
21-ஆக-201910:31:48 IST Report Abuse
Bharatha Nesan முழுதாக படிக்கவும்: வெரும் 350 கோடி ரூபாய் மோசடி செய்த சிதம்பரத்திற்கு ஜெயில் தண்டனை உறுதியாகியுள்ளது(இந்திய அளவில் அனைத்து ஹிந்துக்களையும் காவி தீவிரவாதம் என கொச்சைப் படுத்திய கொள்ளையன்). 2ஜி அலைகற்றையில் ஊழல் ரூபாய் 350,000,0000000(மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்) மோசடி செய்த ராஜா, கனிமொழி, சன் குழுமம் வாழ்நாள் ஜெயில் தண்டனை பெறவேண்டும் (உலக அளவில் அனைத்து இந்துக்களையும் கொச்சை படுத்தும் கொள்ளை க் குடும்பம்) scam case: Delhi HC denies early hearing on CBI’s appeal.The next date of hearing is on 24 October 2019.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X