சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள்| Dinamalar

சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள்

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (30)
Share

புதுடில்லி : நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் டில்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.



latest tamil news


ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லிய ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து டில்லியில் உள்ள ப.சிதம்பரத்திற்கு வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நோட்டீசை வீட்டு வாசலில் ஒட்டிச் சென்றனர். சிதம்பரத்தின் இமெயில் முகவரிக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தும் இதுவரை சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகததால், சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு விசாரணை நடத்த மீண்டும் இன்று (ஆக.,21) காலை 8.10 மணி முதல் 8.45 மணி வரை வந்து சென்றனர்.
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பிச் சென்ற அதிகாரிகள், 4வது முறையாக மீண்டும் 9.35 மணியளவில் சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர். சிபிஐ அதிகாரிகள் அடுத்தடுத்து சிதம்பரம் வீட்டிற்கு வந்து செல்வதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


latest tamil news



கடந்த 24 நேரத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அதிகாரிகள் 4வது முறையாக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டில்லி ஐகோர்ட் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளதால், முன்ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளார். சிதம்பரத்தின் மனு இன்று (ஆக.,21) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X