புதுடில்லி : சிதம்பரத்திற்கு காங்., என்றும் துணை நிற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா தெரிவித்துள்ளார். முதுகெலும்பு இல்லாத மீடியாக்களை மோடி அரசு பயன்படுத்துகிறது என்று ராகுல் பாய்ந்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 2 முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவரை விசாரிக்க சிபிது மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கு இல்லை. 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என கூறியும் இதுவரை சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அதிகாரிகள் தேடி வருகின்றனர். 3 முறை சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றும் சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

பிரியங்கா காட்டம் :
இந்நிலையில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முயற்சித்து வருவது பற்றி பிரியங்கா தனது டுவிட்டர் பக்கித்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அதீத தகுதியுடைய, மதிப்பிற்குரிய ராஜ்யசபா உறுப்பினரான சிதம்பரம், நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக நேர்மையுடன் பணியாற்றி உள்ளார். எந்த வித அச்சமும் இன்றி மத்திய அரசின் தோல்விகள் பற்றி உண்மையை பேசி வருகிறார்.

ஆனால் அவர் கூறும் உண்மைகளை ஏற்க முடியாமல் அவரை வேட்டையாட துடிப்பது வெட்கக் கேடானது. நாங்கள் சிதம்பரத்திற்காக துணை நிற்போம். உண்மைக்காக தொடர்ந்து போராடுவோம். சிதம்பரத்தை ஆதரிப்பதற்காக என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் கண்டனம் :
காங்., எம்.பி., ராகுலின் டுவிட்டர் பதிவில், "சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் முதுகெலும்பில்லாத மீடியாக்களை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது. இந்த அவமானகரமான அதிகார துஷ்பிரயோகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE