சிபிஐ.,க்கு அவகாசம் சொல்லும் சிதம்பரம் வழக்கறிஞர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிபிஐ.,க்கு அவகாசம் சொல்லும் சிதம்பரம் வழக்கறிஞர்

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (72)

புதுடில்லி : சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு மீதான விசாரணை முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காத்திருக்கும்படி சிபிஐ அதிகாரிகளிடம் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் குழு கூறி உள்ளது.







ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்க டில்லி ஐகோர்ட் மறுத்து விட்டது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த கடந்த 24 மணி நேரத்தில் 4 முறை சிபிஐ அதிகாரிகள், சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிதம்பரம் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

இதற்கிடையில் சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய கபில்சிபல், புறப்பட்டு சென்றுள்ளார். இந்த மனு மீதான விசாரணை காலை 10.30 மணியளவில் சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






இந்நிலையில் சிதம்பரத்திடம் விசாரிக்க மீண்டும் மீண்டும் அவரின் வீட்டிற்கு வரும் சிபிஐ அதிகாரிகளிடம், "கோர்ட்டில் விசாரணை முடியும் வரை சிதம்பத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம்" என சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், " 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி ஒட்டி உள்ளீர்கள். ஆனால் அதில் எந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்தது என குறிப்பிடப்படவில்லை. எனது கட்சிகாரருக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுக உரிமை உள்ளது. நேற்று மாலை 4.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டை நாட்டிய போது, அவசர வழக்காக தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதன்படி இன்று மனுத்தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு 10.30 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. அது வரை எனது கட்சிக்காரர் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் இடையே, ப.சிதம்பரம் சார்பில், டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X