பொது செய்தி

இந்தியா

5 ஆண்டுகளில் இல்லாத மழை 18 நாட்களில்

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

புனே : கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவில், மழைக்காலத்தில் பெய்யாத மழை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news




இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் 1204 இடங்களில் மிக கனமழை முதல் அதீத கனமழை பெய்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் மழைக்காலங்களில் பெய்யாத மழை அளவாகும். 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த மழையை விட இருமடங்கு அதிகம். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3500 இடங்களில் மிக கனமழை முதல் அதீத கனமழை பெய்துள்ளது. 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பாலான இடங்கள் 120 மிமீ முதல் 210 மிமீ மழைப்பொழிவை பெற்றுள்ளன.


latest tamil news




இதற்கு முன் 2015 ம் ஆண்டு ஜூலை மாதம் 914 இடங்களில் மிக கனமழை முதல் அதீத கனமழை பெய்துள்ளது. 2019 ம் ஆண்டில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தான் அதிக அளவு மழை பெய்துள்ளது. தற்போது வரை பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழைப்பொழிவு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.R. Nagarajan - Chennai,இந்தியா
21-ஆக-201918:30:10 IST Report Abuse
S.R. Nagarajan தமிழ்நாடு 2015 ல் பொழிந்த பொது அந்த பேரிடரை சந்திக்க தயாராக இல்லை . இந்த ஆண்டும் நாம் சற்று ஒப்ப அந்த நிலை வர சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. முன்னெச்சரிக்கையுடன் தயார் நிலையில் அரசும் மக்களும் செயல்படவேண்டும். கண்கெட்ட அப்பறம் சூரியநமஸ்காரம் செய்வது போல் ஆகிவிடக்கூடாது.
Rate this:
Cancel
Gopi - Chennai,இந்தியா
21-ஆக-201915:47:44 IST Report Abuse
Gopi சென்னை இஸ் வெயிட்டிங்
Rate this:
Cancel
21-ஆக-201911:37:07 IST Report Abuse
நக்கல் விதியை பற்றி எங்கே பிராமணன் நிகழ்ச்சியில் பற்றி சோ ஒரு விஷயம் சொல்லுவார்/ கேள்வி: எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்றால் மனிதர்கள் எதற்கு கஷ்டப்படவேண்டும்? சோவின் பதில்: விதி என்பது மழை மாதிரி, நாம் விதையை போட்டு காத்திருக்கலாம், மழை பெய்யும் போது பலன் அளிக்கும்... விதை போட வில்லையென்றால் மழை நீர் வீணாகும்....../ மழை பெய்யும்போது நாம் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அல்லது சேமித்து வைக்கவேண்டும்.. புலம்புவதில் பலனில்லை... கடவுள் அனைத்து ஜீவராசிகளுக்கும் போதுமான அளவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்.. மனிதர்கள் நாம்தான் சரியாக உபயோக படுத்துவதில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X