தலைமை நீதிபதி மறுப்பு: நீதிபதி ரமணாவிடம் மீண்டும் முறையீடு

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (59)
Advertisement

புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்தார். அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால், தலைமை நீதிபதி கோகாயும் உடனே விசாரிக்க மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து, முன்ஜாமின் மனுவை, மீண்டும், நீதிபதி ரமணா அமர்வில்,சிதம்பரம் வழக்கறிஞர் கபில் சிபல் முறையிட்டுள்ளார்.ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவரை விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 24 மணி நேரத்தில் 4 முறை சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றும், அவரை சந்திக்க முடியவில்லை. 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என நேற்று நள்ளிரவு, சிதம்பரத்தின் வீட்டின் முன் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இருந்தும் இதுவரை சிதம்பரம் ஆஜராகவில்லை.


இதற்கிடையில் டில்லி ஐகோர்ட் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் தரப்பில் கபில் சிபல் ஆஜராகி உள்ளார். அபிஷேக சிங்வி, சல்மான் குர்ஷித், விவேக் தன்கா உள்ளிட்ட 10 வழக்கறிஞர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மனு மீதான விசாரணை துவங்கியதும், சிதம்பரத்தை கைது செய்ய நேற்று இரவு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முயற்சி செய்ததாக கபில் சிபல் குற்றம்சாட்டினார்.
சிதம்பரத்தின் மனுவை விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா, அந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விற்கு அனுப்பினார். அவரும் உடனே விசாரிக்க மறுப்பு தெரிவித்தார்.

சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. எப்ஐஆர் ல் எனது பெயர் இல்லாத நிலையில், முன்ஜாமின் மனு எதற்காக நிராகரிக்கப்பட்டது. எம்.பி.,யாக உள்ள என் மீது கடந்த காலங்களில் எந்த குற்றச்சாட்டும் இல்லை. தப்பி செல்லவோ, சாட்சியங்களை கலைக்கவோ எந்த குற்றச்சாட்டும் இல்லை எனக்கூறப்பட்டுள்ளது.


குறைபாடு


இந்நிலையில் , சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் குறைபாடு உள்ளதாகவும், அதனை சரி செய்து தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. டில்லி ஐகோர்ட் தீர்ப்பு நகல் இணைக்கப்படவில்லை. இதனையடுத்து, அந்த மனுவை திருத்தி தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, தலைமை நீதிபதி அமர்வு அயோத்தி வழக்கை விசாரித்து வருகிறது. இதனால், சிதம்பரம் வழக்கை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, நீதிபதி ரமணா அமர்வில், முன் ஜாமின் மனுவை, தாக்கல் செய்யப்பட்டது.


லுக் அவுட் நோட்டீஸ்


இதற்கிடையே சிதம்பரம் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் பொருட்டு, அவர் மீது லுக்அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
crap - chennai,இந்தியா
21-ஆக-201916:36:42 IST Report Abuse
crap இன்னிக்கு இவருக்காக உச்ச நீதி மன்றத்தில் வேலை செய்த முக்கியமான மூன்று வக்கீல்களின் ஒரு மணி நேர சம்பளமே பல லட்சம் ரூபாய். ஆனால் ஒரு மேல் முறையீட்டு மனுவை ஒழுங்கா எழுதி கொடுக்க தெரியலை. அதை கூட நீதிபதி பார்த்து சொல்ல வேண்டியிருக்கு. - என்ன தொழில் நடத்துறாங்களோ இவர்கள்தான் உச்ச நீதிமன்றத்தையே ஆட்டி படைக்கும் 'தல' வக்கீல்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
21-ஆக-201914:45:18 IST Report Abuse
Kannan ஒரு படத்தில் சிங்கமுத்துவும், வடிவேலுவும் கட்டத்துறை வீட்டிற்கு இரவில் செல்வார்கள் வெவேறு காரணங்களுக்காக. அப்போ ஒரு டயலாக் வரும்- வடிவேலு நான் யோக்கியாண்ட என்பர், யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை? என்பார் சிங்கமுத்து. அதுமாதிரி இருக்கு சிபல் சொல்வது, சிதம்பரம் நல்ல மனுஷன் என்கிறார். அப்படியானால் ஏன் தலை மறைவு?
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
21-ஆக-201914:22:46 IST Report Abuse
Siva கடன் வாங்கி வட்டியே அசலை மிஞ்சும் நிலையில் வட்டி தான் கட்ட முடிந்தது... ஆனால் ஊரை அடித்து உலையில் போட்ட பயல்கள் சுதந்திரமாக திரிகிறார்கள்... என்ன தேசமடா இது... சிதம்பரம் போன்றவர் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வக்கீல் களை வைத்து வெளியே திரிகிறார்கள்... மற்றவன்........ .....கலியுகத்தில் கடைசி கட்டம் என்று நினைக்கிறேன்..... மோடி பிரதமர் ஆனதால் திருடனை போலீஸ் காரர் கைது செய்ய கூடாதா.... திருட்டு சிதம்பரம் திருடன் தானே.... சாதாரண மக்கள் இது போன்ற மோசடி வழக்கில் வந்தாங்களா... பணம் வாங்கி ஓட்டு போட்ட இவன் மகன் தொகுதி மக்கள் சொரணை இல்லா ஜந்து க்கள்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X