சிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு'

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (166)
Advertisement
dmk, stalin, chidambaram, ChidambaramMissing, stalin, D.M.K, M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின், சிதம்பரம்,

புதுடில்லி: சிதம்பரம் மீதான முறைகேடு வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா, தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐயும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சிதம்பரம், எங்கு உள்ளார் என தகவல் இல்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது.






இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிதம்பரத்தின் மீதான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், " காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து திமுக சார்பில் நாளை (ஆக.,22)ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதில் 14 கட்சிகள் கலந்து கொள்கின்றன.





அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிதம்பரத்தின் மீது இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிதம்பரம், ஒரு சட்ட வல்லுநர். அதனால் இந்த வழக்கை சட்டரீதியாக சிதம்பரம் எதிர்கொள்வார்". இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (166)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
28-ஆக-201907:20:32 IST Report Abuse
Muraleedharan.M சட்டம் தெரிஞ்சா களவாடி வேலை செய்யனூமா. திருடன் திருடன்தான். கயவன் கயவன்தான். இவனால் நாட்டுக்கும் வீட்டிற்கும் பயன் ஒன்றுமில்லை. இவன் குடும்பதான் பிழைத்தது. இவன் சவுதியில் இருந்தால் நடு தெருவில் அம்மணமாக நிற்க வைத்து சாட்டையடி நடந்து இருக்கும். ஆனால் இங்கு நீதிமன்றத்தில் நிற்க வைத்து கொட்டாங்குச்சி வைக்கீல்கள் மூலம் வாதாடுகின்றார்கள். கேஸ் ஜெய்த்தால் கையில காசு. தோற்றால் வாயில தோசை. ஏழைகளுக்கு இலவசமாக வாதாட மாட்டார்கள். கபில் கபில்தான்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
24-ஆக-201920:05:53 IST Report Abuse
oce . ஆர்ப்பாட்டம் முடிந்து விட்டதே.அதை பற்றிய செய்தி என்ன. அதில் எத்தனை கட்சிகள் கலந்து கொண்டனர் என்ற விவரமும் திமுக தெரிவிக்க வில்லை.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
24-ஆக-201919:59:15 IST Report Abuse
oce சட்டம் படித்தவர் செய்யும் தப்பிலிருந்து தப்ப்பிப்பது எப்படி என்பதை முன் கூட்டியே தெரிந்து வைத்திருப்பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X