பொய் குற்றச்சாட்டு:சிதம்பரம் மறுப்பு

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (65)
Advertisement

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் என் மீது பொய் குற்றச்சாட்டு பரப்பப்பட்டுள்ளது என சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.






ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.அவரது இல்லத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.




இந்நிலையில் சிதம்பரம் விவகாரம் குறித்தும் அவருக்கெதிரான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்தும் இன்று காங். மூத்த தலைவர்களான கபில்சிபல், அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித் , உள்ளிட்டோர் டில்லியில் உள்ள காங். கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தனர். அப்போது சிதம்பரமும் உடன் வந்திருந்தார்.





பின்னர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஐ.என்.எக்ஸ். மீடியா பண பரிமாற்றத்தில் எனக்கும் எனது குடும்பத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஐ.என்.எக்ஸ் மீடி வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இல்லை. எனக்கு எதிராக சி.பி.ஐ.,யும், அமலாக்கத்துறையும் எந்த குற்றசாட்டையும் பதிவு செய்யவில்லை. நான் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. என் மீதான வழக்கை எதிர்கொள்ள வழக்கறிஞர்கள் மூலம் ஆலோசித்து வருகிறேன்.


சிதம்பரத்தை துரத்திய சி.பி.ஐ.


இதற்கிடையே டில்லி தலைமை அலுவலகத்தில் சிதம்பரம் பேட்டியளித்ததையடுத்து காங். தலைமை அலுவலகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்தனர். உடனே அங்கிருந்து காரில் தனது வீட்டிற்கு விரைந்து சென்றார். உடனே சி.பி..ஐ. அதிகாரிகள் விடாமல் துரத்தி சிதம்பரம் வீட்டிற்கும் வந்தனர். அப்போது சிதம்பரத்துடன் காங். மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ஆகியோர் உடனிருந்தனர்.








Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஆக-201920:06:12 IST Report Abuse
Nallavan Nallavan எந்தத் திருடன் தன்னைத் திருடன் -ன்னு ஒப்புத்துக்குவான் ...........
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
22-ஆக-201916:36:12 IST Report Abuse
Aarkay நம்மிடம் டோம் நல்லவரே தங்கள் மகனின் கோடானு கோடி சொத்துக்கள் எப்படி வந்தது என விளக்க முடியுமா? மக்கள் இந்த நடவடிக்கையை வயவேற்கவே செய்கிறோம். எது செய்தாலும் நடுவன் பாஜக அரசை குறை கூறியே தீரவேண்டும் என அலையும் அந்நிய சக்திகள் மட்டுமே உங்கள் பக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Pranavacharya Prabhakaran - Cairns,ஆஸ்திரேலியா
22-ஆக-201909:40:04 IST Report Abuse
Pranavacharya Prabhakaran இன்னும் எதனை காலம் தான் ஏமாற்றுவார் பி சி இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே லே லே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X