சிதம்பரம் வீட்டுசுவர் ஏறி குதித்து சி.பி.ஐ.,அமலாக்கத்துறை சுற்றி வளைத்தது

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (65)
Share
Advertisement
சிதம்பரம் வீட்டுசுவர் ஏறி குதித்து சி.பி.ஐ.,அமலாக்கத்துறை சுற்றி வளைத்தது

புதுடில்லி: சுவர் ஏறி குதித்து சி.பி.ஐ. அதிகாரிகள் சிதம்பரம் வீ்ட்டிற்குள் நுழைந்தனர்.
தன் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தேடி வரும் நிலையில் இன்று டில்லி தலைமை அலுவலகத்தில் சிதம்பரம் பேட்டியளித்தயைடுத்து காங். தலைமை அலுவலகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்தனர். உடனே அங்கிருந்து காரில் ஜோர்பாக் நகரில் உள்ள தனது வீட்டிற்கு விரைந்து சென்றார். உடனே சி.பி..ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விடாமல் துரத்தி சிதம்பரம் வீட்டிற்கும் வந்தனர். அப்போது சிதம்பரத்துடன் காங். மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ஆகியோர் உடனிருந்தனர்.


சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்



சிதம்பரம் வீட்டின் கேட் பூட்டப்பட்டதால் அதிகாரிகள் வீட்டின் கதவை தட்டினர்.கதவு திறக்கப் படாததால் அதிகாரிகள் உடனே சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். ஒரு பிரிவினர் முன் பக்க வழியாகவும், ஒரு பிரிவினர் வீட்டின் பின் பக்க வழியாகவும் உள்ளே நுழைந்தனர்.உள்ளே நுழைந்த அதிகாாிகள் தொடர்ந்து மற்ற அதிகாரிகளையும் உள்ளே அழைத்து சென்றனர். சி.பி.ஐ., அதிகாரிகளை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் சுவர் ஏறி குதித்தனர்.


டில்லி போலீசார் வருகை



சிதம்பரம் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த சி.பி.ஐ., அதிகாரிகள் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என கருதி டில்லி போலீசாரிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து டில்லி போலீசாரும் சிதம்பரம் வீ்ட்டிற்கு வருகை தந்துள்ளனர். தற்போது சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை , டில்லி போலீசார் உள்ளனர்.


காங் தொண்டர்கள் ஆர்பாட்டம்



டில்லியில் சிதம்பரம் வீட்டின் முன்னர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.





latest tamil news



Advertisement


வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
23-ஆக-201910:39:53 IST Report Abuse
narayanan iyer அமலாக்கத்துறையினர் தேவையில்லாத ஒரு காட்சியை பெரிதுபடுத்திக்காட்டியிருக்கிறார்கள் .சிதம்பரம் ஒரு சட்ட நிபுணர் . அவர் முக்கிய ஏற்பாடுகளை செய்வதற்க்கு நேரம் எடுத்துக்கொண்டார் .அதை இவர்கள் யாரையோ திருப்திப்படுத்த ஒரு காட்சியை அரங்கேற்றி இருக்கிறார்கள் . சிதம்பரத்தை கைதுசெய்துவிட்டால் இந்திய பொருளாதாரம் உடனே சரியாகிவிடுமா என்ன?
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
22-ஆக-201916:38:21 IST Report Abuse
J.Isaac திருடர்கள் தான் சுவர் ஏறி குதிப்பார்கள்
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
23-ஆக-201902:48:15 IST Report Abuse
meenakshisundaramஇவங்க சுவர் ஏறிக்குதிக்கலைனா சிதம்பரம் தன் வீட்டு பின் சுவர் ஏறிக்குதித்து காங் அலுவலகத்துக்கே மீண்டும் போயிருப்பார் ,...
Rate this:
Share this comment
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
22-ஆக-201912:47:37 IST Report Abuse
Gnanasekaran Vedachalam சிபிஐ ஈஸ் ப்ளூ ஸ்காலர் ஜாப் ஒரு வைட் ஸ்காலர் ஜாப் எனக்கு ஒன்னும் தெரிய வில்லை அவர்களின் துறையின் உள்ளீடு வெளியீடு ஒன்னும் தெரிய வில்லை ஆனால் ஒன்னும் மட்டும் தெரியாது சுவர் ஏறி குதிக்கணு பின் வாசல் வழியா உள்ளே நுழையணு ஆனால் புலனாய்வு எந்த கதியில் போகவேண்டும் எத்தனை ஆண்டு போக வேண்டும் என்று யாருக்கும் தெரியாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X