சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மாணவர்களின் வீடு தேடி செல்லும் ஆசிரியர்கள்!

Added : ஆக 21, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
மாணவர்களின் வீடு தேடி செல்லும் ஆசிரியர்கள்!''ஆடியும் முடிந்தது... என் டில்லி பந்தமும் முடிந்ததுன்னு, சொல்லிஇருக்காரு வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''விளக்கமா சொல்லுங்க....'' என்றார், அந்தோணிசாமி.''அ.தி.மு.க., - ராஜ்யசபா, எம்.பி.,யா இருந்த மைத்ரேயனின் பதவிக்காலம், ஜூலை, 24ம் தேதியுடன் முடிஞ்சிட்டுல்லா... அவருக்கு, டில்லியில குடுத்திருந்த
 மாணவர்களின் வீடு தேடி செல்லும் ஆசிரியர்கள்!

மாணவர்களின் வீடு தேடி செல்லும் ஆசிரியர்கள்!

''ஆடியும் முடிந்தது... என் டில்லி பந்தமும் முடிந்ததுன்னு, சொல்லிஇருக்காரு வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''விளக்கமா சொல்லுங்க....'' என்றார், அந்தோணிசாமி.''அ.தி.மு.க., - ராஜ்யசபா, எம்.பி.,யா இருந்த மைத்ரேயனின் பதவிக்காலம், ஜூலை, 24ம் தேதியுடன் முடிஞ்சிட்டுல்லா... அவருக்கு, டில்லியில குடுத்திருந்த அரசு வீட்டை, ஆடி மாசம்கிறதால காலி பண்ணாம இருந்தாரு வே...''ஆடி முடிஞ்சதும், டில்லி வீட்டை காலி செஞ்சவரு, மின்சாரம், மெட்ரோ வாட்டர், தொலைபேசி பில்கள் எல்லாத்தையும் கட்டி, அந்த துறைகளிடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் வாங்கி, வீட்டு சாவியையும், பார்லிமென்ட் நிர்வாகத்திடம் ஒப்படைச்சிட்டாரு...''அவருக்கு, 18 வருஷமா, டில்லியில கார் ஓட்டுன டிரைவர், வீட்டு உதவியாளர், லோக்சபா அலுவலக செயலர், துணை செயலருக்கு எல்லாம் நன்றி சொல்லி, அவங்களுடன் படம் எடுத்துட்டு, கண்ணீர் மல்க சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்காரு...''தன் முகநுால் பக்கத்துல, 'ஆடியும் முடிந்தது... என் டில்லி பந்தமும் முடிந்தது'ன்னு உருக்கமா பதிவு போட்டிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.''எல்லா செலவுகளையும் ஏத்துக்கிற எங்களுக்கு பாராட்டு இல்லையான்னு புலம்புறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அந்தோணிசாமி.''புலம்புறது யாரு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''பெரம்பலுார்ல நடந்த சுதந்திர தின விழாவுல, பல்வேறு துறைகள்லயும் சிறப்பா வேலை பார்த்தவங்களுக்கு, கலெக்டர் கையால, பாராட்டு சான்றிதழ் குடுத்தாங்க... இதுக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்புல, 22 ஊழியர்களை பரிந்துரை செஞ்சிருந்தாங்க...''அவங்களும், தங்களது குடும்பத்தினரோட விழாவுக்கு வந்திருந்தாங்க... ஆனா, அதுல ஒருத்தருக்கு கூட, பாராட்டு சான்றிதழ் தரலைங்க... 'அரசு விழாக்களுக்கான செலவுகளை ஏத்துக்கிற, எங்களது துறைக்கு, பாராட்டு சான்றிதழ் தராம விட்டது நியாயமில்லை'ன்னு புலம்பிட்டு இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.''பெண் அதிகாரியின் அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவியறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு சென்றார், குப்பண்ணா.''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி... இவங்க பொறுப்புக்கு வந்ததுமே, மலை போல குவிஞ்சு கிடந்த, ஆசிரியர்களின் பணப்பலன், ஓய்வூதிய பலன், பதவி உயர்வு பைல்களை எல்லாம், ராத்திரி, 12:00 மணி வரை கூட உட்கார்ந்து பார்த்து, 'கிளியர்' பண்ணிட்டாங்க ஓய்...''பள்ளிகள்ல, கஷ்டமான பாடங்களுக்கு, இரண்டு வகுப்புகளை தொடர்ந்து நடத்தினா, பலன் கிடைக்கும்னு உத்தரவு போட்டிருக்காங்க...''அதுவும் இல்லாம, சொல்லாம, கொள்ளாம ரெண்டு நாளைக்கு மேல, 'லீவ்' எடுக்கற மாணவ - மாணவியர் வீட்டுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் நேர்ல போய், பெற்றோரிடம் விசாரிக்கணும்னு உத்தரவு போட்டிருக்காங்க ஓய்...''அதுலயும், மாணவியா இருந்தா, கண்டிப்பா ஆசிரியை ஒருத்தர், வீட்டுக்கு போய் விசாரிக்கணும்னு அறிவுறுத்தி இருக்காங்க... இது, பெற்றோர் மத்தியில, நல்ல வரவேற்பை ஏற்படுத்தி இருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.''எல்லாரும் இவங்களை மாதிரி இருந்துட்டா, நல்லாயிருக்கும் பா...'' என்றபடியே, அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஆக-201909:13:56 IST Report Abuse
Kalyanaraman டெல்லி வீட்டை காலி செய்து மின்சாரம் தொலைபேசி மெட்ரோ வாட்டர் கட்டணத்தை கட்டி தடையில்லா சான்றிதழ் வாங்கிக் கொடுத்தார் மைத்ரேயன். வாழ்த்துக்கள் சார். முன்னாள் பிரதமர் உட்பட பல பிரதிநிதிகளை பதவிக்காலத்துக்கு பிறகு அரசு வீட்டை காலி செய்யவைக்க படாதபாடு படவேண்டியுள்ளது. அதிலும் சில அல்பங்கள் விலை உயர்ந்த பொருட்களை ஆட்டையைப் போட்டுவிடுவர். அவர்கள் மத்தியில் இவரொரு ஜென்டில்மேன். என்ன இருந்தாலும் பிஜேபி யில் இருந்தவரல்லவா, அதனாலதான் நேர்மையை கடைபிடித்துள்ளார்.
Rate this:
Cancel
Ashokan Subramanian - Kovur chennai,இந்தியா
22-ஆக-201908:50:56 IST Report Abuse
Ashokan Subramanian சாந்தி மேடம் மேலும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற வாழ்த்துக்கள். அரசு பள்ளிகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். Corporate private schools across தமிழ்நாடு.must focus on appointing teachers with highly qualified and dedicated also pay them equally as you are doing good business, currently they are not up to the mark......
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
22-ஆக-201908:39:56 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த சாந்தி திருப்பூர் சம்பாதித்த சொத்துக்களை இவரது வக்கீல் கணவர் எப்படி கையாண்டு வருகின்றார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X