பொது செய்தி

இந்தியா

ராணுவத்தில் சீர்திருத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ராஜ்நாத் சிங், ஒப்புதல் ,சீர்திருத்த, நடவடிக்கை

புதுடில்லி:ராணுவ தலைமையகத்தில் இருந்து, 206 அதிகாரிகளை, வேறு பணியிடங்களுக்கு மாற்றுதல், சிறப்பு, 'விஜிலென்ஸ்' பிரிவு அமைத்தல், மனித உரிமை பிரச்னைகளை கையாள, ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட, சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

நம் ராணுவத்தில், 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ராணுத்தின் போர்த்திறனை மேம்படுத்த வும், வீரர்களின் திறனை முழுமையாக பயன்படுத்தவும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான சீர்திருத்தங்கள், முக்கிய கமாண்டர்களுக் கான வயது வரம்பை குறைத்தல், அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்துதல், ராணுவத்தின் திறனுக்கு ஏற்ற வகையிலும், தேவையான அளவுக்கும் ஆள்குறைப்பு செய்தல் உள்ளிட்டவற்றை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான முதல் கட்ட பரிந்துரைகளை அமல்படுத்த, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.இதன்படி, ராணுவ தலைமையகத்தில் பணி புரிந்து வரும், 206 அதிகாரிகள், ராணுவ முகாம்கள் மற்றும் தளங்களில் பணியாற்றும் வகையில், இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.ராணுவ தலைமை தளபதி தலைமையில், முப்படையினரின் பிரதிநிதிகள் இடம்பெறும், சிறப்பு விஜிலென்ஸ் அமைப்பும் உருவாக்கப்பட உள்ளது.

தற்போது, முப்படைகளையும், தனித்தனியாக கையாளும் வகையில், இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, உருவாக்கப்பட உள்ள அமைப்பில், ராணுவ தலைமை தளபதியின் கீழ், விஜிலென்ஸ் பிரிவின் கூடுதல் இயக்குனர், இந்த அமைப்பை கையாளுவார். ராணுவம், கடற்படை, விமானப்படையின் சார்பில், தலா, ஒரு கர்னல் இடம் பெறுவர்.அதே போல, மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், முப்படைகளின் துணை தளபதிகளின் கீழ், மேஜர் ஜெனரல் தலைமையில் தனி அமைப்புகள் உருவாக்கப்படும். மனித உரிமைகள் மீறல் தொடர்பான புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
22-ஆக-201913:42:41 IST Report Abuse
Balamurugan Balamurugan ராணுவத்தில் உள்ள புல்லுருவிகளையும் களையெடுக்க வேண்டும் அமைச்சரே
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
22-ஆக-201904:07:51 IST Report Abuse
blocked user வாவ். நேர்மையான அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் தைரியமாக செயல்பட்டால் பல ஊழல் மன்னர்கள் துண்டைக்காணும், துணியைக்காணும் என்று ஓட வேண்டி வரும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X