ராஜ் தாக்கரேக்கு உத்தவ் ஆதரவு

Added : ஆக 21, 2019
Advertisement

மும்பை, ''பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரேவிடம், அமலாக்கத்துறையினர் நடத்தவுள்ள விசாரணை, பயனுள்ளதாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை,'' என, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கே, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரேயின் உறவினரும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவருமான, ராஜ் தாக்கரே மீது, 'ஐ.எல்., அண்டு எப்.எஸ்.,' நிறுவனத்தில் நடந்த பண பரிமாற்ற மோசடியில் பங்கு உள்ளதாக கூறி, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவன முதலீட்டில், 450 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விசாரணைமஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா மூத்த தலைவருமான, மனோகர் ஜோஷியின் மகன், உன்மேஷ், இந்த நிறுவனத்தை துவங்கினார். அவருடன், ராஜ் தாக்கரே இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், உன்மேஷிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள், கடந்த சில நாட்களாக, விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்பார்க்கவில்லைமஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரேவிடம், இன்று விசாரணை நடக்கிறது.இது குறித்து, ராஜ் தாக்கரேவின் உறவினரும், அரசியலில் எதிர் துருவமாக செயல்படும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ''அமலாக்கத் துறையின் இந்த விசாரணை, பயனுள்ளதாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X