3.78 கோடி புதிய உறுப்பினர்கள் இலக்கை கடந்து பா.ஜ., சாதனை

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (16)
Advertisement
3.78 கோடி,புதிய,உறுப்பினர்கள்,இலக்கை,கடந்து,பா.ஜ.,சாதனை

புதுடில்லி, உறுப்பினர் சேர்க்கையில், 2.2 கோடி என்ற இலக்கை கடந்து, 3.78 கோடி புதியவர்கள், பா.ஜ.,வில் இணைந்துஉள்ளனர்.

பா.ஜ.,வில், 11 கோடி உறுப்பினர்கள் பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. குறைந்தது, 20 சதவீதம் அதிகரிக்க, அதாவது 2.2 கோடி புதியவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை, 6ம் தேதி, வாரணாசியில் பிரதமர் மோடியும், தெலுங்கானாவில், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும், புதிய உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தனர். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.திட்டமிட்ட, 2.2 கோடி என்ற எண்ணிக்கையை விட அதிகமாக, 3.78 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக, பா.ஜ., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, பா.ஜ., துணைத் தலைவரும், உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளருமான, துஷ்யந்த் குமார் கவுதம் கூறியதாவது:கடந்த ஒன்றரை மாதமாக, புதிய உறுப்பினர்கள்சேர்க்கை, வெற்றிகரமாக நடந்து முடிந்தது. புதிதாக,மூன்று கோடியே, 78 லட்சத்து, 67 ஆயிரத்து, 753 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.உ.பி.,யில், 65 லட்சம்; மேற்கு வங்கத்தில், 36 லட்சம்; குஜராத்தில், 34 லட்சம்; டில்லியில் 15 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

உண்மையில், அடுத்த சில நாட்களில், நாடு முழுவதும், புள்ளி விபரங்கள் சேகரிக்கும் போது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, ஐந்து கோடியாக அதிகரிக்கும் என, கருதப்படுகிறது. மோடியின் புகழும், அமித் ஷாவின் நிர்வாகத்திறனும், இதற்கு முக்கிய காரணம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஆக-201900:50:16 IST Report Abuse
Pugazh V தேசத்தின் பொருளாதார நிலை உள்நாட்டு உற்பத்தி பற்றி யெல்லாம் பொய்யான புள்ளி விவரம் தந்து ஏமாற்றி வருகிறவர்கள். இப்படி சொல்வதில் அதிசயப்பட ஏதுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
22-ஆக-201922:59:34 IST Report Abuse
Allah Daniel DMK மாதிரி வருமா..ஒரு காலத்தில் கருணாநிதி "ஷு" வை துடைச்சிதுங்க...அவரு செத்துபோனபின் அவரு பையன் "ச்டாலின்" "ஷு" வை துடைக்குதுங்க...அவருகப்பறம், அவரு பையன் "ஷு" வை துடைக்குங்க...அதுவே திராவிடர் "பகுத்தறிவு"...
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
22-ஆக-201922:05:02 IST Report Abuse
Allah Daniel தமிழக "பகுத்தறிவு", "வித்துவான்" சொம்புகள் என்னமா பீல் பண்ணுதுங்க........"உதயநிதி"......"சோனியா" போன்ற "புது" முகங்களுக்கு, கட்சியில் பெரும் பதவி கொடுத்த உங்களை போல "வித்துவான்" யாரு இருக்கா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X