அரசியல் செய்தி

தமிழ்நாடு

3 ஆண்டுகளில் பெருங்களத்துார் மேம்பாலம்

Added : ஆக 21, 2019
Advertisement

சென்னை : நீண்ட இழுபறிக்கு பின், பெருங்களத்துார் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை, அடுத்த மாதம் துவங்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

ஜி.எஸ்.டி., சாலையில், பெருங்களத்துார் சந்திப்பு வழியாக, நாள்தோறும், லட்சக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. அங்குள்ள ரயில்வே கேட்டை கடந்து, பெருங்களத்துார் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிக்கு செல்ல, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால், ஜி.எஸ்.டி., சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலுக்கு தீர்வுஇதனால், அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றன.

பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில், இந்த சந்திப்பை கடந்து செல்ல, ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்.இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, மேம்பாலம் கட்ட, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்துள்ளது. ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து, இப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரயில்வே நிர்வாகம், தன் பகுதியில், மேம்பாலத்திற்கான துாண்கள் அமைத்து, கட்டுமான பணிகளை முடித்தது.மற்ற பகுதிகளில், நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தனர். அரசு நிதி ஒதுக்காததே இதற்கு காரணம்.ரூ.120 கோடிதற்போது, எஞ்சிய பணிகளை முடிக்க, நெடுஞ்சாலைத்துறைக்கு, அரசு, 120 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.

இதையடுத்து, கட்டுமான பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரை, இறுதி செய்வதற்கான பணிகளில், நெடுஞ்சாலைத் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அடுத்த மாதம், கட்டுமான பணிகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை பெருநகரம் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தண்டவாளத்திற்கு மேல் பகுதியில், ரயில்வே நிர்வாகம், 150 அடி நீளத்திற்கு பணிகளை முடித்து உள்ளது. நெடுஞ்சாலைத் துறையால், ஜி.எஸ்.டி., சாலையில், 1 கி.மீ.,, பெருங்களத்துாரில் இறங்கும் இடத்தில், 0.5 கி.மீ.,, பீர்க்கன்காரணையில் இறங்கும் இடத்தில், 0.4 கி.மீ.,க்கு மேம்பாலம் கட்டப்படவுள்ளது.

74 துாண்கள் தாம்பரம், வண்டலுார், குரோம்பேட்டை சந்திப்புகளில், உள்ள மேம்பால வடிவில், இந்த மேம்பாலம் கட்டப்படவுள்ளது. மேம்பாலத்திற்காக, 74 துாண்கள் அமைக்கப்பட உள்ளன. ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், சாலையை தடுத்து, பணிகளை மேற்கொள்வதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. திட்டமிட்டப்படி, மூன்று ஆண்டுகளில், இந்த மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உறுதி. இங்கு மின்விளக்கு வசதியை ஏற்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X