எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை பாதுகாப்புக்காக கிராம சபை கூட்டம் எப்படி நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தல்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நீர்நிலை பாதுகாப்புக்காக கிராம சபை கூட்டம் எப்படி நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தல்

நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நீர் மேலாண்மை குறித்து முடிவு செய்யவும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை மறுநாள், சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், பாஸ்கரன், சென்னை தவிர, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:நீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண, நீர் மேலாண்மை பாதுகாப்பு இயக்கம் என்ற, 'ஜல்சக்தி அபியான்' திட்டத்தை, ஜூலை, 1 முதல், இரண்டு கட்டமாக செயல்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு; பாரம்பரியமிக்க மற்றும் இதர நீர் நிலைகளை புனரமைத்தல்; ஆழ்துளை கிணறுகளை மீட்டெடுத்தல்; நீர் வடிப்பகுதி மேம்பாடு; தீவிர காடு வளர்த்தல் ஆகியவை, நீர் மேலாண்மை பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள்.இத்திட்டம் வெற்றி பெற, கிராம மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்.எனவே, இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 24ம் தேதி, சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.

திட்டம் குறித்து, மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.கிராம சபை கூட்டம், ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடத்த வேண்டும். அனைத்து பிரிவு மக்களும், பங்கேற்க வேண்டும்.கூட்டம், காலை, 11:00 மணிக்கு துவங்க வேண்டும். இடம், நேரம் ஆகியவற்றை, அனைத்து கிராம மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.அனைத்து பொது மக்களும், ஊராட்சி நிர்வாகம் தொடர்புடைய அலுவலர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

கூட்டத்தில், நீர் மேலாண்மை குறித்து, பொது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு, 'மொபைல் ஆப்' உருவாக்கி உள்ளது.கிராம சபை கூட்டத்தில், விவாதிக்கப்பட உள்ள பொருள் மற்றும் பிற துணை திட்டங்களை, 'மொபைல் ஆப்'பில், பதிவு செய்ய வேண்டும். அத்துடன், கூட்டம் தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவு விபரங்களை, gpdp.nic.in என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.கூட்டம் தொடர்பான முழு விபரத்தை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்திற்கு, 27க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
22-ஆக-201908:12:48 IST Report Abuse
அம்பி ஐயர் முதலில் நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும் அரசியல் வியாதிகளுக்கும் அதற்குத் துணை போகும் அரசு அதிகாரிகளுக்கும் தான் பாடம் எடுக்க வேண்டும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X