தமிழ்நாடு

முன்மாதிரி! வேளச்சேரியின் முதல் அடுக்குமாடி குடியிருப்பு...மழைநீர் சேமிப்பு திட்ட கட்டமைப்புகள் அருமை... கடுமையான கோடையிலும் வறட்சியே இல்லை

Added : ஆக 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 முன்மாதிரி! வேளச்சேரியின் முதல் அடுக்குமாடி குடியிருப்பு...மழைநீர் சேமிப்பு திட்ட கட்டமைப்புகள் அருமை... கடுமையான கோடையிலும் வறட்சியே இல்லை

சென்னை : வேளச்சேரியில் உருவான முதல் அடுக்குமாடி குடியிருப்பு, மழைநீர் சேமிப்பு திட்டத்தை, மிக அருமையாக செயல்படுத்தி வருகிறது.

இதனால், நகரமே தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி, லாரி தண்ணீரை எதிர்பார்த்த நிலையில், இந்த குடியிருப்பு வாசிகள், நாள் ஓன்றுக்கு, 1.2 லட்சம் லிட்டர் நீரை, நிலத்தடி நீர் மூலமாகவே பெற்று, செலவை மிச்சப்படுத்தி உள்ளனர்.சென்னையில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு கோடையில், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. குடிநீர் ஏரிகள் பாலைவனமான நிலையில், கடல்நீர் திட்டம், கல்குவாரிகள், விவசாய கிணறுகள் தான், சென்னை மக்களின் தாகம் தீர்த்தன.

சூரிய நமஸ்காரம்அவையும் ஒரு கட்டத்திற்கு போதாமல், பற்றாக்குறையை சமாளிக்க, ஜோலார்பேட்டை குடிநீர் திட்டம், 50 கி.மீ., துாரத்திற்கு மேல் உள்ள கல்குவாரிகளில் இருந்து நீர் பெறுவது போன்ற திட்டங்களை அரசு அறிவித்தது. இதற்காக, பல நுாறு கோடிகளை அரசு செலவிட்டுள்ளது. இதுநாள் வரை துாங்கிய அரசு நிர்வாகம், வரலாறு காணாத வறட்சிக்கு பிறகே, நீர்நிலைகளை துார்வாருவதையும், மழைநீர் சேமிப்பு திட்டத்தை கட்டாயமாக்கு வதையும் கையில் எடுத்தது. இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதை போல இருந்தாலும், இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதே என, நினைக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில், மழைநீரை, நாம் குடியிருக்கும் வளாகத்தில் சேமித்தால், எந்த கோடையிலும், நமக்கு அது கைகொடுக்கும் என, நிரூபித்துக் காட்டி உள்ளனர், வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.நான்கு கிணறுகள்அடையாறு மண்டலம், 179வது வார்டில், வேளச்சேரி விரைவு சாலையை ஒட்டி, 1994ல், 4 ஏக்கர் பரப்பு இடத்தில், 'பிரக்ருதி' என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.இதில், மூன்று மாடி கொண்ட, 182 வீடுகள் உள்ளன. வேளச்சேரியின், முதல் அடுக்குமாடி குடியிருப்பு இது தான். வீடு கட்டும் முன், இந்த பகுதி, விவசாய நிலமாக இருந்துள்ளது.

இந்த, 4 ஏக்கர் இடத்தில், 60 அடி ஆழத்தில், நான்கு கிணறுகள் இருந்தன. இதை மூடாமல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டினர்.மருந்து நிறுவனம்ஆரம்பத்தில், கிணற்று நீரை, மின்மோட்டார் வழியாக, மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்றி, வீடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர். வேளச்சேரி பகுதியில், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. அங்கிருந்து வெளியேறும் கழிவுகள், கிணற்று நீரை பாதித்தன.அதன்பின், 60 அடி ஆழத்தில், ஒரு ஆழ்துளை கிணறு தோண்டினர். இந்நிலையில், மருந்து நிறுவனங்கள் மூடப்பட்டதையடுத்து, கிணற்று நீரை, மீண்டும் பயன்படுத்த துவங்கினர்.

சுற்றி குடியிருப்புகள் வர துவங்கியதால், நிலத்தடி நீர் குறைந்ததையடுத்து, அடுத்தடுத்த ஆண்டுகளில், 160 அடி ஆழத்தில், இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க, 2004ல், குடியிருப்பு வாசிகள், இரண்டு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தனர். அதோடு, மொட்டை மாடியில் இருந்து, தரை பகுதிக்கு, 48 குழாய்கள் அமைத்தனர். இந்த குழாயில் இருந்து வடியும் மழைநீரை சுத்திகரித்து, கிணற்றில் விடுகின்றனர். இதற்காக, ஒவ்வொரு கிணற்றின் அருகிலும், நான்கு மழைநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைத்துள்ளனர்.

உறை கிணறுதெளிந்த கிணற்று நீரை, மின்மோட்டார் மூலம், நேரடியாக தொட்டியில் ஏற்றி, வீடுகளுக்கு பயன்படுத்துகின்றனர்.அதோடு, வளாகத்தில், நேரடியாக விழும் மழைநீரை சேமிக்க, 5 இடங்களில், உறை கிணறுகள் அமைத்துள்ளனர். இதோடு, குடிநீர் இணைப்பும் உள்ளது.இந்த குடியிருப்பில், 1994 முதல், தற்போது வரை, மழைநீர், கிணற்று நீரையே, குடியிருப்புவாசிகள் பயன்படுத்துகின்றனறனர். இடையில், மருந்து நிறுவனத்தால், ஐந்து ஆண்டுகள், லாரி குடிநீர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

மீதமுள்ள, 20 ஆண்டு களில், எந்த கோடையிலும், இந்த குடியிருப்பில், தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டது இல்லை. இந்த ஆண்டு, சென்னையில் உள்ள, பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், லாரி நீர் வாங்கி பயன்படுத்தினர். இந்த குடியிருப்புக்கு, நான்கு கிணற்றில் உள்ள நீர் மற்றும் ஆழ்துளை கிணற்று நீர் கை கொடுத்தது. இதற்கு காரணம், மழைநீர் சேகரிப்பு திட்டம். இதுபோன்று ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, மழைநீரை சேமித்தால், கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து மீள முடியும்.

சென்னையில் உள்ள, இதர அடுக்குமாடி குடியிருப்புகளிலும், இதே போன்று கட்டமைப்பு அமைத்தால், தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க முடியும்.ஆக்கப்பூர்வமான சிந்தனை, வீட்டு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு இருந்தால், தற்சார்பு அடிப்படையில், தண்ணீரை பயன்படுத்த முடியும். எங்களுக்கு, கோடையில் கை கொடுத்தது, ஏற்கனவே சேமித்த மழைநீர் தான். லாரி நீரை வாங்கி பயன்படுத்துவதால், இன்னொரு இடத்தில் உள்ள விவசாயி, அதை சுற்றி உள்ள மக்கள் பாதிக்கின்றனர்.

ஒவ்வொரு, அடுக்குமாடி குடியிருப்புகளும், இதே முறையை பயன்படுத்தினால், கோடையில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முடியும்.ஆர்.சீனிவாசராகவன், தலைவர், 'பிரக்ருதி' அடுக்குமாடி குடியிருப்பு, வேளச்சேரிமழைநீர் சேமிப்பும், கிணற்று நீரும்!மழைநீர் சுத்திகரிப்பு தொட்டி ஒவ்வொன்றும், 5 அடி ஆழம், 3.5 அடி சுற்றளவில் உள்ளது. அதற்குள், 2 அடி உயரத்தில், முக்கால் அங்குல ஜல்லி; அதற்கு மேல், அரை அடியில், அடுப்பு கரித்துண்டு; அதற்கு மேல், 2 அடியில், 1.5 அங்குல ஜல்லி போடப்படுகிறது.

மொட்டை மாடியில் இருந்து, சிறிய குழாய்களில் வரும் மழைநீர், 5 அங்குலம் கொண்ட, ஒரே குழாய் வழியாக, சுத்திகரிப்பு தொட்டியில் விழுகிறது.ஒரு கிணற்றில், அருகில், நான்கு சுத்திகரிப்பு தொட்டி அமைத்துள்ளனர். நான்கு தொட்டிகளில் சுத்தகரித்த தண்ணீர், 4 அங்குலம் கொண்ட ஒரே குழாய் வழியாக, கிணற்றில் வடிகிறது. குழாயுடன் கூடிய, ஒரு சுத்திகரிப்பு தொட்டி, 40 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்துள்ளனர். ஆண்டிற்கு ஒரு முறை, ஜல்லியில் உள்ள துாசிகளை தட்டி விட்டால் போதும்.

வேறு எந்த செலவும் இல்லை.ஒரு முறை செலவு!இந்த குடியிருப்பில் உள்ள, 182 வீடுகளுக்கு, ஒரு நாளைக்கு, 1.20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை, லாரியில் வாங்கினால், தினசரி, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகும். ஒரு வீட்டுக்கு, 200 ரூபாய்க்கு மேல், தண்ணீருக்கு செலவு செய்ய வேண்டி வரும். மழைநீர் சுத்திகரிப்பு தொட்டி மற்றும் உறை கிணறு அமைக்க, ஒரு முறை செலவு தான். இவை, 182 வீட்டு உரிமையாளர்கள் பங்கிட்டு கொண்டனர். இதன் வாயிலாக, கோடையில், யாரும் தண்ணீருக்கான, தனியாக செலவு செய்யவில்லை.

உறை கிணறு!அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நேரடியாக விழும் மழைநீரையும், பூமிக்குள் செலுத்த, ஐந்து இடங்களில், உறை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இவை, 5 அடி ஆழம், 3.5 அடி சுற்றளவில் அமைத்துள்ளனர். அதற்குள், மைய பகுதியில், 13 அடி ஆழத்தில், பக்கவாட்டில் துளையிட்ட குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. அதை சுற்றி, 2 அடி உயரத்தில், முக்கால் அங்குல ஜல்லி; 1.5 அடி உயரத்தில், 1.5 அங்குல ஜல்லி போடப்பட்டுள்ளது. அதோடு, உறை கிணற்றின் மேல் பகுதியை சுற்றியும், சிறிய ஜல்லிகள் பரப்பப்பட்டுள்ளன. உள்ளே குப்பை சேராத வகையில், குழாயில் வலையும், மழைநீர் உள்ளே செல்லும் வகையில், துளை போட்ட சிமென்ட், 'சிலாப்' போட்டு, உறை கிணறை மூடி உள்ளனர். ஐந்து உறை கிணறுகள், 65 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - chennai,இந்தியா
22-ஆக-201921:12:20 IST Report Abuse
venkat paaraattugal
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
22-ஆக-201916:13:04 IST Report Abuse
Gopi இந்த நிகழ்வை பல ஊடகங்களில் பிரபலப்படுத்தவும்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஆக-201913:56:26 IST Report Abuse
Sampath Kumar வாழ்த்துக்கள் எது போல மற்ற குடி இருப்பு மக்கள் முயற்சிக்க வேண்டு கிறான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X