பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த மாதம் வாக்காளர் சரிபார்ப்பு பணி

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
தமிழகத்தில் அடுத்த மாதம் வாக்காளர் சரிபார்ப்பு பணி

சென்னை, தமிழகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு பணி, அடுத்த மாதம் நடக்க உள்ளது.தவறுகள் இல்லாத, வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்காக, வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை, தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. \

இத்திட்டத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்., 1 முதல், 30 வரை நடக்க உள்ளது.அப்போது, வாக்காளர்களை சரி பார்ப்பதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக வருவர். அவர்களிடம், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, தங்களுடைய பெயர் என்பதை உறுதிப்படுத்த, வாக்காளர்கள் உரிய ஆவணத்தை அளிக்க வேண்டும்.

பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார், ரேஷன் கார்டு, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், தபால் கணக்கு புத்தகம், வருமான வரி அறிக்கை, குடிநீர், தொலைபேசி, மின் கட்டணம், காஸ் பில், பிறரிடமிருந்து வந்த தபால் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம்.வாக்காளர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை, பொது சேவை மையத்திற்கு சென்று, சரிபார்த்து கொள்ளலாம்.

மேலும், '1950' என்ற தொலைபேசி எண்ணில் பேசியும், www.nvsp.in என்ற இணையதளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
22-ஆக-201908:03:07 IST Report Abuse
அம்பி ஐயர் அப்பாடி.... இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை.... அதிகாரிகள்.... தனி அலுவலர்க காட்டுல மழையோ மழை.... அடை மழை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X