பதவியை எதிர்பார்த்து அதிருப்தியாளர்கள் டில்லியில் முகாம்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (3)
Advertisement
பதவியை எதிர்பார்த்து அதிருப்தியாளர்கள் டில்லியில் முகாம்

பெங்களூரு:கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் பா.ஜ.வினர் அதிருப்தியடைந்துள்ள நிலையில் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காதோ என்ற அச்சத்தில் முந்தைய சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.க்கள் டில்லி பா.ஜ., தலைவர்களை சந்திக்க முகாமிட்டு உள்ளனர்.

ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும் தருவாயில் காங்கிரசின் 14 ம.ஜ.த.வின் 3 என 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.சபாநாயகரின் முடிவை எதிர்த்து அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் சார்ந்த கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப் பட்டனர்.பா.ஜ. ஆட்சி அமையும் போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என அக்கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது.

ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் சட்டப்படி அவர்களால் எந்த பதவியும் வகிக்க முடியாது.இம்மாதம் 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தகுதி நீக்க எதிர்ப்பு வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை விசாரணைக்கு வரவில்லை. இதற்கிடையில் கர்நாடக பா.ஜ. அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பதவியேற்பதில் சட்ட சிக்கல் இருப்பதால் அதிருப்தியடைந்தனர்.

பா.ஜ. ஆட்சியமைய காரணமாக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளியின் சகோதரர் பாலசந்திர ஜார்கிஹோளிக்கும் அவரது ஆதரவாளர் உமேஷ்கத்திக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட வில்லை.இதனால் எட்டு தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் இரவு டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்வர் எடியூரப்பா வீட்டுக்கு சென்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

இவ்வேளையில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 'முக்கியமான துறைகள் எங்களுக்கு வேண்டும். எனவே சில துறைகளை உங்களிடமே வைத்திருங்கள்' என கோரினர்; தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவி கிடைக்காததற்கும் அதிருப்தி தெரிவித்தனர்.இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் எடியூரப்பா ''அமைச்சர் பதவி வழங்கப்படும். யாருக்கும் சந்தேகம் வேண்டாம் பயப்பட வேண்டாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்குமென்ற நம்பிக்கை உள்ளது.

கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா செயல் தலைவர் நட்டாவை சந்திக்க வைக்கிறேன்'' என தைரியம் கூறியதாக தெரிகிறது.இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமடஹள்ளி, சிவராம் ஹெப்பார், பா.ஜ. முன்னாள் அமைச்சர் சி.பி.யோகேஸ்வர் ஆகியோர் நேற்று காலை பெங்களூரிலிருந்து ஒரே விமானத்தில் டில்லி புறப்பட்டுச் சென்றனர்.

அவர்களை தொடர்ந்து மற்ற தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும் நான்கு குழுக்களாக தனித்தனியே நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றனர். முனிரத்னா மட்டும் திருப்பதி சென்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.அனைவரும் டில்லியில் ஒன்று கூடி அரசியல் எதிர்காலம் பற்றி பேசி வருகின்றனர். இன்று பா.ஜ. மேலிடத் தலைவர்களை சந்தித்து தங்களின் வழக்கு பற்றியும் அமைச்சர் பதவி பற்றியும் பேசுகின்றனர். அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.வின் இருப்பதால் அந்த சண்டையில் தங்களுக்கும் பதவி கிடைக்காதோ என்ற அச்சத்தில் அதிருப்தியாளர்கள் டில்லியில் முகாமிட்டுஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pazhaniappan - chennai,இந்தியா
22-ஆக-201917:01:30 IST Report Abuse
pazhaniappan இவனுங்களுக்கு காங்கிரஸ் காரனுகள பற்றிப்பேச என்ன யோக்கியதை இருக்கு , மானங்கெட்டவனுக
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
22-ஆக-201916:54:38 IST Report Abuse
சுந்தரம் அதிருப்தியா? அப்படி ஒன்னும் இந்த கூட்டத்துல கிடையாதே. எல்லாருமே மக்கள் சேவைக்கு தங்களை அர்ப்பணிச்சுக்குவாங்களே.
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
22-ஆக-201909:52:12 IST Report Abuse
Anandan இவங்கதான் மாநிலத்துக்கு நல்லது செய்யப்போறாங்களாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X