அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் விவகாரம் : தலைவர்கள் பேட்டி

Added : ஆக 21, 2019
Advertisement

'சட்டரீதியாக சந்திப்பார்'

சிதம்பரம் விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்வோடு, இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக தான் அறிகிறேன். சிதம்பரம், ஒரு சட்ட வல்லுனர். எனவே அவர், சட்ட ரீதியாக, நிச்சயமாக, இதை சந்திப்பார்.ஸ்டாலின், தி.மு.க., தலைவர்
'ஓடி ஒளிய கூடாது'

எந்த வழக்காக இருந்தாலும், அதை எதிர்கொள்ள வேண்டும். ஓடி ஒளிவதால், பிரயோஜனம் கிடையாது. எனவே சிதம்பரம், வழக்கை எதிர்கொள்வது நல்லது. 'மத்தியில், காங்கிரஸ் ஆட்சி வந்ததும், உடனடியாக, அ.தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்; அனைவரையும், சிறைக்கு அனுப்புவோம்' என, லோக்சபா தேர்தலின் போது, சிதம்பரம் கூறினார். இன்று அவருக்கே, அந்த நிலை ஏற்பட்டிருப்பது, பரிதாபத்துக்குரிய விஷயம்.நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு, அவர் குற்றமற்றவர் என்பதை, நிரூபிக்க வேண்டும்.ஜெயகுமார், மீன் வளத்துறை அமைச்சர்

சிதம்பரமும், பாமரனும் ஒன்றே!

வங்கி பணத்தை கொள்ளை அடித்தவர்களை பார்த்து, மோடி சும்மா இருக்க மாட்டார். சிதம்பரம் நியாயமானவர் என்றால், நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். மறைந்த ஜெ., மீது வழக்கு போட்டு, சட்டம் பேசியவர், இன்று ஏன் பயப்படவேண்டும். சட்டம், தன் கடமையை செய்து வருகிறது. அதற்கு, சிதம்பரமும், பாமரனும் ஒன்று தான்.ராஜேந்திர பாலாஜி,தமிழக, பால்வளத் துறை அமைச்சர்,

செய்த தவறுக்காக தேடப்படுகிறார்'

சிதம்பர ரகசியம்' என்பது முதுமொழி; சிதம்பரம், ரகசியமாக இருக்கிறார் என்பது, இன்றைய நிலை. சிதம்பரம் செய்த ஊழலுக்காக, செய்த தவறுக்காக, அவர் தேடப்படுகிறார்.பொது வாழ்க்கையில், துாய்மை இல்லை என்றால், தலைமுறைக்கே தலைவராக இருந்தாலும், தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருக்கும். முன்னாள் நிதியமைச்சரும், சட்டம் பயின்றவருமான சிதம்பரம், சி.பி.ஐ., சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். மடியில் கனமில்லை என்றால், விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது தானே.தமிழிசை, தமிழக பா.ஜ., தலைவர்'

மத்திய அரசின் தலையீடு'
சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கையில், மத்திய அரசின் தலையீடு உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மட்டும், நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். நீதி கிடைக்கும் என, நம்புகிறோம், சிதம்பரத்தின் புகழைக் கெடுக்கும் நடவடிக்கையாக, இந்த வழக்கை பார்க்கிறோம்.கே.எஸ்.அழகிரி,தமிழக காங்கிரஸ் தலைவர்
'தண்டனையை அனுபவிக்க வேண்டும்'

உப்பு தின்றால், யாராக இருந்தாலும், தண்ணீர் குடிக்க வேண்டும். ஊழல் செய்தால், அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். பல ஆண்டுகளாக, மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தால், தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை.அவர் இப்போது, ஊழல் வழக்கில் சிக்கி இருக்கிறார். தவறு செய்தால், தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.பிரேமலதா, தே.மு.தி.க., பொருளாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X