அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெண்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும் முதல்வர் பழனிசாமி பேச்சு

Added : ஆக 22, 2019
Advertisement

ஈரோடு, ''பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கை வேண்டும்'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.ஈரோடு திண்டல் வேளாளர் கல்வி அறக்கட்டளை பொன் விழாவை முன்னிட்டு வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டடத்தை திறந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:'இளைஞர்களுக்கு தரமான கல்வி வழங்கினால் தான் மனித வளம் மேம்பட்டு தொழில் திறன் உயர்ந்து நாட்டின் பொருளாதாரம் உயரும். சமூகம் மேம்படும்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்துவார்.கடந்த 2011ல் ஜெயலலிதா ஆட்சியின் போது 32 சதவீதமாக இருந்த உயர்கல்வி தற்போது 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டும்.யூடியூப் பேஸ்புக் டுவிட்டர் என பலவும் வந்துள்ளதால் ஜாக்கிரதையாக வாழ்ந்தால் மட்டுமே உன்னத நிலையை அடைய முடியும். 'டீன் ஏஜில்' மனது அலைபாயும். மிக கவனமாக முன்னேறி குடும்பத்துக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.ஆண்களைவிட பெண்கள் அதிகம் படிக்கின்றனர்; தேர்ச்சி பெறுகின்றனர். அதிக அக்கறையுடன் விளங்குகின்றனர். எனவே நல்ல சிந்தனையை ஏற்படுத்தினால் சாதிக்க முடியும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X