பொது செய்தி

இந்தியா

சிதம்பரம் வழக்கு கடந்து வந்த பாதை...

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (11)
Advertisement
சிதம்பரம் வழக்கு கடந்து வந்த பாதை...

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வழக்கின் சில முக்கிய திருப்பங்கள்.

2017 மே 15: மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு 2007ல், வெளிநாடுகளில் இருந்து, 350 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. இதில், அப்போது மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் மகன் கார்த்தியின் தலையீடு இருந்ததாகவும் ரூ. 10 கோடி லஞ்சம் பெற்றதாகவும் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.ஜூன் 16: கார்த்தி வெளிநாடு சென்று தப்பிக்காமல் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அவர் மீது 'தேடப்படும் நபர்' என்ற லுக் அவுட் நோட்டீசை பிறப்பித்தது.

ஆக., 10: 'லுக் அவுட்' நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

ஆக., 14: 'லுக் அவுட்'நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது.

ஆக., 18: கார்த்தி, ஆக., 23க்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

செப்.,11: கார்த்தி வெளிநாடு சென்ற போது, அவர் செய்த பணபரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாடுகளில் அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்த அறிக்கையை சி.பி.ஐ., தாக்கல்.

செப்., 22: கார்த்தி வெளிநாடு செல்ல தடை மற்றும் வெளிநாட்டில் உள்ள அவரது வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும் என சி.பி.ஐ., உச்சநீதிமன்றத்தில் வாதம்.

அக்., 9: தன் மகளின் படிப்புக்காக பிரிட்டன் செல்ல அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி மனு.

* தன் மீதும், மகன் கார்த்திமீதும் அரசியல் பழி வாங்கும்செயலில் பா.ஜ., அரசு ஈடுபடுவதாக சிதம்பரம் குற்றச்சாட்டு.

நவ.20: கார்த்தி வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி.

2018 ஜன., 31 கார்த்தியின் 'லுக் அவுட்' நோட்டீஸ் மீதான தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.

பிப்., 16: கார்த்தி நண்பர் ஆடிட்டர் பாஸ்கர ராமனை அமலாக்கத் துறை கைது செய்தது.

பிப்., 28: சென்னை விமான நிலையத்தில் கார்த்தியை சி.பி.ஐ., கைது செய்தது.

மார்ச் 23: 23 நாட்களுக்கு பின் கார்த்திக்கு ஜாமின்.

ஜூலை 25: சிதம்பரத்தை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்வதற்கு டில்லி உயர்நீதிமன்றம் தடை.

அக்., 11: கார்த்தியின் ரூ. 54 கோடி சொத்து பட்டியலை அமலாக்கத்துறை சமர்பிப்பபு.2019, ஜூலை 11: ஐ.என்.எக்ஸ்., மீடியா இயக்குனர் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விரும்புவதாக கூறியதற்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அனுமதி.

ஆக., 20: சிதம்பரம் மீதான முன் ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

* இரண்டு மணி நேரத்திற்குள் அவர் சி.பி.ஐ., முன் ஆஜராகவேண்டும் என்று அதிகாரிகள் அவரது வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டினர்.

ஆக., 21: டில்லி வீட்டில் சிதம்பரத்தை இரவில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvan - Rishikesh,இந்தியா
22-ஆக-201923:40:18 IST Report Abuse
Duruvan எல்லாம் வைரமுத்து "காமாற்றுப்படை" புத்தகம் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டதால் வந்த வினை.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஆக-201915:43:22 IST Report Abuse
Nallavan Nallavan நீதிபதிகள் இவனுக்கு நம்பிக்கை கொடுத்திருப்பதால் (கவலைப்படாதே .... உச்சநீதிமன்றமே நம்ம "கை"யில) இவனோட முகத்துல புன்னகை தவழ்ந்துக்கிட்டே இருக்கு .....
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
22-ஆக-201910:05:13 IST Report Abuse
Allah Daniel ஆட செய்.. கேவலமான பாதையா இருக்குதே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X