ராகுல், பிரியங்கா ஆவேசம்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement


சிதம்பரத்திற்கு எதிராக சி.பி.ஐ. தரப்பு வேகம் காட்டுவதாக ராகுல் பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரசில் உள்ள சில மூத்த தலைவர்கள் இவ்விஷயத்தில் மவுனம் காக்கின்றனர்.காங். பொதுச் செயலர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் சிதம்பரத்தை சி.பி.ஐ. வேட்டையாடுவதாக வர்ணித்துள்ளார். அதில் பிரியங்கா கூறியிருப்பதாவது:மரியாதைக்குரியவரான சிதம்பரம் பார்லிமென்ட் உறுப்பினரும்கூட. உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளில் பொறுப்புணர்வுடன் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இப்படிப்பட்டவரை கோழைகள் வேட்டையாடுகின்றனர். நாங்கள் சிதம்பரத்துக்கு பக்கபலமாக துணை நிற்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.காங். முன்னாள் தலைவர் ராகுல் ''சிதம்பரத்தின் மீதான மரியாதையையும் அவரது கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையுடன் முதுகெலும்பு இல்லாத சில ஊடகங்களும் மோடி அரசால் ஏவப்படுகின்றன. அதிகாரத்தை மிகவும் மோசமான முறையில் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், ராஜ்யசபா காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்ட வெகு சிலரைத் தவிர காங். கட்சியை சேர்ந்தவர்கள் இந்த விஷயத்தில் மவுனம் காத்து வருகின்றனர். காங்., தலைவர் சோனியா, மூத்த தலைவர்களான மன்மோகன்சிங், அகமது படேல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
22-ஆக-201910:30:31 IST Report Abuse
Mano சட்டத்தின்படி தவறு இல்லை என்று நிரூபித்துவிட்டு வெளியே வரட்டுமே அதற்க்கு ஏன் பிரியங்கா குதிக்கிறார். எங்கும் ஓடி ஒளியவில்லை என்று பில்டப் வேறு. நோட்டீஸ் கொடுக்காவிட்டால் வெளிநாடு தப்பி சென்றிருப்பார். சி பி ஐ சரியான வழியில்தான் செல்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஆக-201908:20:22 IST Report Abuse
ஆரூர் ரங் எப்போதுமே பினாமி கூட்டாளி மாட்டிக்கொண்டால் கதறுவது சகஜம்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஆக-201907:28:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni aadaathe ponne ஆடாதே அடங்கும்மா அடங்கு அடுத்து காத்துண்டுருக்கு உனக்கு உன் அண்ணனுக்கும் அண்ட் சோனியாவுக்கும் ஆப்பு, சேர்த்தவைகள் பலகோடி மாட்டிக்காதவரை எல்லோரும் கிரேட் மாட்டிண்டால் எல்லாரும் அவ்ளோதான் பாப்பர் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X