பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட வரைவாளர் உரிமம் பெற நேர்காணல்

Added : ஆக 22, 2019
Advertisement
 கட்டட வரைவாளர் உரிமம் பெற நேர்காணல்

கோவை:கோவை மாநகராட்சி, நகரமைப்பு பிரிவில், கட்டட பட வரைவாளர் உரிமம் பெறுவதற்கான நேர்காணல் நேற்று நடந்தது; 200க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் பங்கேற்றனர்.

வீடு அல்லது வணிக நிறுவனம் உள்ளிட்ட ஏதேனும் கட்டடம் கட்ட வேண்டுமெனில், கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் வரைபட அனுமதி பெற வேண்டும். இதற்கு பதிவு பெற்ற கட்டட வரைவாளர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.தமிழக அரசின் புதிய உத்தரவுப்படி, பதிவு பெற்ற பொறியாளர்களே இனி, அவ்வரைபடத்தில் கையொப்பமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கட்டட வரைவாளர் உரிமம் பெறுவதற்கு அழைப்பு விடுத்ததில், 233 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களுக்கான நேர்காணல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் நேற்று நடந்தது.உதவி நகரமைப்பு அலுவலர்கள், விண்ணப்பதாரர்களின் அசல் சான்றுகள் மற்றும் கட்டட அனுமதி தொடர்பான மாதிரி வரைபடம் ஆகியவற்றை சரிபார்த்தனர்.நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'தேர்வு பெறுபவர்களுக்கு, பதிவு பெற்ற பொறியாளர் என்கிற உரிமம் வழங்கப்படும். கட்டட வரைபடத்தில் அவர்களே கையெழுத்திட வேண்டும். கட்டட வரைவாளர்களாக இருப்பவர்களும் விண்ணப்பித்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படும்.ரூ.5,000 'டிபாசிட்' செலுத்த வேண்டும் என்பதால், நேர்காணல் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும். 'அவர்களுக்கு மட்டும் 'டிபாசிட்' செலுத்தக்கோரி, அறிவுறுத்தப்படும். பணம் செலுத்திய பின், உரிமம் வழங்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X