அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 22, 2019
Advertisement

ராமநாதபுரம் : பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை நகராட்சி மக்கள் பயன்பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெறுபவருக்கு வேறு எங்கும் கான்கிரீட் வீடுகள் இருக்கக் கூடாது. வீடு கட்டுவதற்கான இடத்தின் நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டா வைத்திருக்க வேண்டும். மாத வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலை சமர்ப்பிக்க வேண்டும்.புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்பின் பரப்பளவு குறைந்தது 300 சதுர அடி முதல் 500 சதுர அடி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு குடியிருப்பிலும் தனித்தனியாக வசிப்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை அமைக்கப்பட வேண்டும். வீடு கட்டிக்கொள்ள மானியமாக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நான்கு நிலைகளில் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கட்டட அடித்தளம் நிறைவு பெற்ற பின் 50 ஆயிரம், கட்டட லிண்டல் நிறைவு பெற்ற பின் 50 ஆயிரம், கான்கிரீட் தளம் நிறைவு பெற்ற பின் 50 ஆயிரம், அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற பின் 60 ஆயிரம் ரூபாய் என 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். கூடுதல் விபரங்களுக்கு உதவி பொறியாளர்கள், ராமநாதபுரம் 94431 83194, கீழக்கரை 63806 54852, பரமக்குடி 94888 83638, ராமேஸ்வரம் 94873 90981 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X