பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்துாரில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்

Added : ஆக 22, 2019
Advertisement

முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் குற்றங்களை தடுக்க டி.எஸ்.பி., ராஜேஷ் உத்தரவின் பேரில் 21 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடக்கிறது.

முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்ட், தேரிருவேலி முக்கு ரோடு, காந்திசிலை, அரசு மருத்துவமனை, கடலாடி முக்குரோடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 10 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களை பிடிப்பதற்கு சுலபமாக இருந்தது. அதுமட்டுமின்றி வாரச்சந்தை நாட்களில் திருட்டு சம்பவம் குறைந்துள்ளது. தற்போது கடந்த சில நாட்களாக சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் உள்ளது.

இதனால் குற்ற சம்ப வங்களில் ஈடுபடுவர்கள் அதை சாதகமாக பயன்படுத்தி விடுவதாக பொதுமக்கள் கூறி வந்தனர். இதையடுத்து சேதமடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சீரமைக்கவும், கூடுதலாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தவும் முதுகுளத்துார் டி.எஸ்.பி., ராஜேஷ் நடவடிக்கை எடுத்தார். தற்போது முதுகுளத்துார் பகுதியில் இவற்றை பொருத்தும் பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X