பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மரக்கன்றுகள் வழங்கிய டீக்கடைக்காரர்

Added : ஆக 22, 2019
Advertisement
 இலவச, மரக்கன்றுகள், வழங்கிய, டீக்கடைக்காரர்

புதுக்கோட்டை:'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், புதுகை அருகே, டீக்கடைக்காரர், மரக் கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே, வம்பன் நால்ரோடு பகுதியில், சிவக்குமார், 42, என்பவர், பகவான் என்ற பெயரில், டீக்கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு வருபவர்களில், பெரும்பாலும் விவசாயிகள். இவர்கள், டீக்கடைக்கு வரும் போதெல்லாம், கஜா புயலால், மரங்கள் சாய்ந்தது குறித்து, கவலையுடன் பேசி வந்துள்ளனர்.

இதை கவனித்த சிவக்குமார், மரங்களை இழந்த விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க நினைத்தார். இதன்படி, நேற்று, தன் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, இலவசமாக, அதிக விலை கொண்ட சந்தனம், செம்மரக் கன்றுகளை இலவசமாக வழங்கினார். நேற்று மட்டும், 700 மரக்கன்றுகள் வழங்கினார். ஏற்கனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தன் டீக்கடையில் இருந்த கடன்களை சிவக்குமார் தள்ளுபடி செய்துள்ளார்.

சிவக்குமார் கூறுகையில், ''விவசாயிகளால் தான், எனக்கு வியாபாரம் நடக்கிறது. ஆகவே, அவர்களது கஷ்டத்துக்கு உதவும் வகையில், தற்போது மரக் கன்றுகளை இலவசமாக வழங்கியுள்ளேன்.
தொடர்ந்து, அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X