அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (65)
Advertisement
சிதம்பரம்,கைது,தலைவர்கள்,கருத்து

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் காங். மூத்த தலைவர் சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டது குறித்து தலைவர்கள் கருத்து:
மத்திய அரசு அஞ்சாது:

நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர் எப்போதும் நான் குற்றம் செய்தேன் என்று ஒத்துக்கொள்வதில்லை. எதிர்க்கட்சிகளின் போராட்டங்களையெல்லாம் கண்டு மத்திய அரசு அஞ்சாது.

-எச்.ராஜா, பா.ஜ.,


'சட்டரீதியாக சந்திப்பார்'


சிதம்பரம் விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்வோடு, இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக தான் அறிகிறேன். சிதம்பரம், ஒரு சட்ட வல்லுனர். எனவே அவர், சட்ட ரீதியாக, நிச்சயமாக, இதை சந்திப்பார்.

- ஸ்டாலின், தி.மு.க., தலைவர்

காஷ்மீர் விவகாரத்தை மூடிமறைக்கவே சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
-கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர்


பரிதாபம்


'மத்தியில், காங்கிரஸ் ஆட்சி வந்ததும், உடனடியாக, அ.தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்; அனைவரையும், சிறைக்கு அனுப்புவோம்' என, லோக்சபா தேர்தலின் போது, சிதம்பரம் கூறினார். இன்று அவருக்கே, அந்த நிலை ஏற்பட்டிருப்பது, பரிதாபத்துக்குரிய விஷயம். நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு, அவர் குற்றமற்றவர் என்பதை, நிரூபிக்க வேண்டும்.


-ஜெயகுமார், மீன் வளத்துறை அமைச்சர்சிதம்பரமும், பாமரனும் ஒன்றே!வங்கி பணத்தை கொள்ளை அடித்தவர்களை பார்த்து, மோடி சும்மா இருக்க மாட்டார். சிதம்பரம் நியாயமானவர் என்றால், நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். மறைந்த ஜெ., மீது வழக்கு போட்டு, சட்டம் பேசியவர், இன்று ஏன் பயப்படவேண்டும். சட்டம், தன் கடமையை செய்து வருகிறது. அதற்கு, சிதம்பரமும், பாமரனும் ஒன்று தான். சிதம்பரம் குற்றம் செய்திருக்கிறார்; மோடி அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது

- ராஜேந்திர பாலாஜி, தமிழக, பால்வளத் துறை அமைச்சர்,


தமிழகத்திற்கு தலைகுனிவுபொது வாழ்க்கையில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். சிதம்பரம் செய்த ஊழலுக்காக, செய்த தவறுக்காக, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது தமிழகத்திற்கே தலைகுனிவு. அவர் நடந்து கொண்ட விதமும் ஆச்சர்யம் அளிக்கிறது.

-தமிழிசை, தமிழக பா.ஜ., தலைவர்'


மத்திய அரசின் தலையீடு'


சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கையில், மத்திய அரசின் தலையீடு உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மட்டும், நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். நீதி கிடைக்கும் என, நம்புகிறோம், சிதம்பரத்தின் புகழைக் கெடுக்கும் நடவடிக்கையாக, இந்த வழக்கை பார்க்கிறோம்.

-கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்


'தண்டனையை அனுபவிக்க வேண்டும்'உப்பு தின்றால், யாராக இருந்தாலும், தண்ணீர் குடிக்க வேண்டும். ஊழல் செய்தால், அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். பல ஆண்டுகளாக, மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தால், தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை.அவர் இப்போது, ஊழல் வழக்கில் சிக்கி இருக்கிறார். தவறு செய்தால், தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
-பிரேமலதா, தே.மு.தி.க., பொருளாளர்


கைவிட வேண்டும்


சிதம்பரத்தின் மீதான பழிவாங்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். அவர் ஒன்றும் பயங்கரவாதி அல்ல.
-திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள். கட்சி.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shrinivaasan s - Bangalore,இந்தியா
25-ஆக-201913:22:05 IST Report Abuse
shrinivaasan s ருபாய் அச்சடிக்கும் இயந்திரத்தை எதிரி பாக்கிஸ்தான் நாட்டுக்கு விற்ற ப.சி எவ்வளவு பெரிய துரோகி..
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-ஆக-201918:30:03 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஏழையோ பணக்காரனோ கட்டாயம் ராணுவப்பயிற்சித்தேவை மாணவர்களுக்கு கேட்டுகுட்டிச்சுவார்யிண்டுருக்கானுக பலரும் ஒரேபிள்ளையென்று செல்வசெழிப்பாளர்க்கறதுமாபெரும் தப்பு என்று எப்போது பெற்றோருக்குப்புரியுதோ அப்போதான் விடிவு
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஆக-201918:22:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni காஷ்மீருக்குமுன்னாடிலேந்தே பேசிவிவகாரம் நடந்துண்டுர்க்கே தெரியாதா மாட்டிக்காமல் ஓடிஒளிஞ்சாங்க அப்பனும் பிள்ளையும் முகவின் மாவை எப்படியோ தப்பிச்சுட்டாப்பல இவாளும் தப்ப ட்ரிப்பான்னா நடக்காதுங்கோ மாறன் செய்த லீலைகளை இன்னம் அரசுமரக்கவே இல்லீங்க அதுபோல இந்தகொள்ளைகளும் கூட்டாளிகளேதான் திமுக அண்ட் கான் கிரேஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X