அரசியல் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்

Added : ஆக 22, 2019
Advertisement

தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆலோசனை
திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.,ஏ., இதயவர்மன், திருக்கழுக்குன்றம் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு, நேற்று வந்தார். திட்ட பணிகள் குறித்து, அங்கிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின், பொதுமக்களிடம் வீட்டு மனை பட்டா, குளம் துார்வாருதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்றார்.தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கரணை ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிமடம் அருகே உள்ள குளத்தை பார்வையிட்டார்.
பள்ளி மாணவர்களுக்கு உதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபழகுனர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில், ஒலிமுகமதுபேட்டை, பிள்ளையார்பாளையம், கைலாசநாதர் மேட்டுத்தெரு உட்பட, 10 அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 1,500 பேருக்கு, நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.சங்கத்தின் தலைவர், வாசுதேவன் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் சதாசிவம், தெய்வசிகாமணி ஆகியோர், இந்நிகழ்ச்சியை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X