அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே திட்டத்திற்கு இரு பூமி பூஜை ஆளும்கட்சியினர், 'காமெடி'

Added : ஆக 22, 2019
Advertisement


திருவொற்றியூர், ஒரே திட்டத்திற்கு, அ.தி.மு.க.,வினர், இருமுறை பூமி பூஜை போட்ட சம்பவம், கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.எண்ணுார் விரைவு சாலையில், ராமகிருஷ்ணா நகர் - சூரியநாராயணா சாலை வரை, தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்காக, பூமிபூஜை போடும் நிகழ்வு, நேற்று மாலை, என்.டி.ஓ., குப்பம் அருகே நடந்தது.திருவொற்றியூர் மண்டலத்தில், 14, 11, 8, 9, 5 ஆகிய வார்டுகள்; தண்டையார்பேட்டை மண்டலம், 39வது வார்டை உள்ளடக்கி, எண்ணுார் விரைவு சாலையில், 363 கம்பங்களில், 726 எல்.இ.டி., தெருவிளக்குகள் அமைக்கும் பணி, 2.72 கோடி ரூபாய் செலவில் நடக்கவுள்ளது.இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்று, பூமி பூஜையில், செங்கற்களை எடுத்து வைத்து, பணிகளை துவக்கினார்.தண்டையார்பேட்டை தவிர்த்து, 327 கம்பங்களில், 654 தெரு விளக்குகள் அமைக்கும் பணிக்காக, ஜூலையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், திருவொற்றியூர் குப்பம் அருகே, எண்ணுார் விரைவு சாலையில், அ.தி.மு.க.,வினருடன் பூமி பூஜை போட்டார்.ஒரே திட்டத்திற்கு, அ.தி.மு.க.,வினர் இரு தரப்பாக பிரிந்து, வெவ்வேறு நாட்களில் பூமி பூஜை போட்ட சம்பவம், கலகலப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X