பொது செய்தி

தமிழ்நாடு

சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு

Added : ஆக 22, 2019
Advertisement

மாமல்லபுரம், :சீன நாட்டு அதிபர், மாமல்லபுரம் சுற்றுலா வர உள்ளதால், பேரூராட்சிகள் இயக்குனர், பழனிசாமி, நேற்று இப்பகுதியில் ஆய்வு செய்தார்.இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு அதிபர்கள், பிரதமர்கள், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால, பாறை சிற்பங்களை, காண விரும்புகின்றனர்.அவர்கள் சுற்றுலா வரும்போது, இவ்வூர் ஆக்கிரமிப்புகளை, தற்காலிகமாக அகற்றி, சுற்றுலா பகுதிகள், துாய்மை சுகாதாரத்துடன் பராமரிக்கப்படும்.இந்நிலையில், சீன அதிபர், ஜின் பின், இந்திய பிரதமர், நரேந்திர மோடியுடன், இங்கு சுற்றுலா வர உள்ளதாக கூறப்படுகிறது.சுற்றுலாவின்போது, அவருக்காக, பிரத்யேக கலாசார நிகழ்ச்சி நடத்தவுள்ளதாகவும் தெரிகிறது.அவரது சுற்றுலாவிற்காக, சீன துாதர் சுன், ஆக., 4ல், சிற்பப் பகுதிகளை பார்வையிட்டார். இந்நிலையில், நகர் பகுதி துாய்மை பராமரிப்பை, பேரூராட்சிகள் இயக்குனர், பழனிசாமி, நேற்று, உதவி இயக்குனர், சாந்தகுமார், செயல் அலுவலர், லதா உள்ளிட்டோருடன், இங்கு ஆய்வு செய்தார்.
புறவழிச்சாலை சந்திப்பு பகுதி வரை, வாகனத்தில் வந்த அவர், சந்திப்பிலிருந்து, பேரூராட்சி அலுவலகப் பகுதி வரை, நீண்ட துாரம் நடந்து ஆய்வு செய்தார்.சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், சாலையை துாய்மையாக பராமரிக்கவும், அவர்களிடம் அறிவுறுத்தினார்.கடற்கரைக்கோவில் உள்ளிட்ட சிற்பப் பகுதிகளின், சுற்றுப்புறத்தை ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X