அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறுமால் கண்மாய் துார்வார நிதி ஒதுக்கீடில்லை

Added : ஆக 22, 2019
Advertisement

சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியம், சிலுக்கப்பட்டி அருகே சிறுமால் பாசன கண்மாயை குடிமராமத்து திட்டத்தில் துார்வாராததால் மழை நீர் விரயமாவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

சிறுமால் கண்மாய் 110 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது. சிலுக்கப்பட்டி முதல் சூராணம் ரோட்டில் வண்ணிக்குடி வரை இக்கண்மாய் பரப்பு உள்ளது. மழை காலங்களில் நல்லேந்தல் பகுதி நீர்பிடிப்பு பகுதியில் சேகரமாகும் மழை நீர் வரத்து கால்வாய் வழியாக சிறுமால் கண்மாயை நிரப்பும். ஆண்டுதோறும் இங்கு மழை நீர் தேங்குவதின் மூலம் இப்பகுதியை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது 120 ஏக்கர் நிலங்களில் நெல் அறுவடை செய்து வந்தனர்.கடந்த 5 ஆண்டாக மழையின்றி வறட்சி நிலவுவதால் மழைநீர் கண்மாயில் சேகரமின்றி நெல் நடவு செய்யாமல் தரிசானது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாயை கண்காணிக்காமல் விட்டதால், முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. எனவே மாவட்டத்தில் 39 கோடி ரூபாயில் 109 பொதுப்பணித்துறை கண்மாய் குடிமராமத்து பணி செய்ய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதில் சிறுமால் கண்மாயிலும் குடிமராமத்து பணி செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இக்கண்மாயில் குடிமராமத்து பணி செய்ய, நிதி ஒதுக்கவில்லை.

இதனால் இப்பகுதி பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிறுமால் கண்மாய் பாசன விவசாயி எஸ்.பாண்டி கண்ணன் கூறியதாவது: இக்கண்மாயில் குடிமராமத்து பணி செய்ய அதிகாரிகளிடம் மனு அளித்தோம். அடுத்த முறை குடிமராமத்து பணி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர்.பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கண்ணன் கூறியதாவது: 2020 ல் குடிமராமத்து பணிக்கு அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து, சிறுமால் கண்மாயை தேர்வு செய்து பணிகள் நடத்துவதாக, விவசாயிகளுக்கு உறுதி அளித்துள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X