அரசியல் செய்தி

தமிழ்நாடு

சர்ச்களை பழுது பார்க்க ரூ. ஒரு கோடி நிதி

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சிவகங்கை : கிறிஸ்தவ ஆலயங்களை பழுதுபார்க்க மாநில அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

நடப்பாண்டில் இத்திட்டத்தில் திருச்சி, திருவாரூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கடலுார், ஈரோடு, விருதுநகர், கோயம்புத்துார், கரூர், விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 16 தேவாலயங்களுக்கு ரூ.39.62 லட்சம் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நிதியுதவி தேவைப்படும் தேவாலயங்கள் bcmbcmw@tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்கள், சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.தேவாலயங்களை கலெக்டர் நியமிக்கும் குழு ஆய்வு செய்து அதன் பேரில் சிறுபான்மை நலத்துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.

நிதியுதவி தேவாலய வங்கிக்கணக்கில் இரு தவணைகளாக வரவு வைக்கப்படும்.எனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டத்தில் இயங்கும், பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட, வெளி நாடுகளில் இருந்து சீரமைப்பு பணிக்காக எவ்வித நிதியுதவியும் பெற்றிடாத தேவாலயங்கள் இந்த நிதியுதவியை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாநில சிறுபான்மையினர் நல ஆணையர் மா.வள்ளலார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
22-ஆக-201904:49:32 IST Report Abuse
 Muruga Vel ஆண்டவனுக்கே இந்த நிலைமையா ....இந்த தேவாலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் நிலைமை எப்படி இருக்கும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X